எவ்விதமாக தூதன் என்னிடத்தில் வந்தார்? HOW THE ANGEL CAME TO ME ஓவன்ஸ்போரோ, கென்டக்கி, அமெரிக்கா 53-11-09 1. (சகோதரன் பிரன்ஹாம் யோவான் 5:28 முதல் 37 வரை வாசிக்கிறார் - ஆசிரியர்.) ....பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமான தையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான். நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சில காலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாய் இருந்தீர்கள். யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு, அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; 2. இப்பொழுது, நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இன்றிரவு உம்மை ஆராதிக்கும்படி வருகிறோம். நாங்கள் வரும்படிக்குக் கிடைத்த சிலாக்கியத்திற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கிரயத்துக்குக் கொள்ளப் பட்டிருக்கிற இந்த பரிசுத்த ஆவியானவரின் வாய்க்காலினூடாக, நாங்கள் இயேசுவின்... நாமத்தின் மூலமாக கிருபையின் சிங்காசனத்தண்டையில் பிரவேசித்திருக்கிறோம். இன்றிரவு நாங்கள் அதற்காக மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறோம். இப்பொழுது எங்கள் பாவங்களை நீர் எங்களுக்கு மன்னிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் ஏறக்குறைய இங்கே இந்தப் பட்டணத்தைச் சுற்றிலும் பரவி ஒன்றாக கூடி வந்திருக்கையில், நாங்கள் இங்கேயுள்ள இந்தச் சிறு அரங்கத்தில் இச்சிறு ஜனக்கூட்டத்துடன் இன்றிரவு கூடி வந்திருக்கிறோம், உம்முடைய பரிசுத்த பிரசன்னமானது எங்களை சந்திக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நீர் ஏற்கனவே இங்கு இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம். நீர் இங்கே இன்றிரவு மிகுதியாகவும் அபரிமிதமாகவும் செய்ய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் இருதயங்கள் தாமே களி கூருவதாக. இன்றிரவு ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு புதிய பிடிமானத்தைப் பெற்றுக்கொள்வானாக. இங்கே இரட்சிக்கப் படாதவர்கள் யாராவது இருப்பார்களானால், அவர்கள் இன்றிரவு தங்களுடைய ஜீவியத்தில் பாவத்தை விட்டுவிட்டு, அவர்கள் வந்து, விசுவாசித்து, இரட்சிக்கப்படுவார்களாக. இதை அருளும், பிதாவே, இங்கேயுள்ள உமது ஊழியக்காரரை சந்தித்தருளும், கர்த்தாவே, நான் எனக்கு முன்பாக உம்முடைய இரத்தத்தினால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர்களை பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கையில், எனக்கு உதவி செய்யும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 3. நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்காக ஊழியம் செய்த என்னுடைய ஊழியத்தின் வரிசையோடு நான் கவனித்த மிகவும் ஆச்சரியமான காரியங்களில் ஒன்று என்னவென்றால், ஜனங்கள் வினோதமாக இருப்பது தான். மனிதர்களுடைய ஜீவியத்தைக் குறித்து ஆய்வு செய்வது தான் ஒரு நபர் ஆய்வு செய்யக்கூடிய மிகப்பெரிய காரியங்களில் ஒன்றாகும்: அது ஜனங்களுடைய சுபாவத்தை கவனிப்பதாகும். நீங்கள் தேசத்தின் வித்தியாசமான பாகங்களுக்கோ, உலகத்தின் வித்தியாசமான பாகங்களுக்கோ, நீங்கள் எங்கே போனாலும், அங்கே ஒரு வித்தியாசமான- கிறிஸ்துவைக் குறித்தும், அவருடைய பணியைக் குறித்தும், அவருடைய ஊழியக்காரர்களைக் குறித்தும், ஆராதனையைக் குறித்தும் ஜனங்கள் எடுத்துக் கொள்கிற வித்தியாசமான மனப்பான்மை அங்கே உண்டு. அந்தக் காரியங்களில் ஒன்று என்னவென்றால், ஒருவகையான கூட்டம் தேசத்தின் ஒரு பாகத்தில் அற்புதமாக இருக்கும், தேசத்தின் மற்ற பாகத்திலோ அது கிரியை செய்யாது. இப்பொழுது, பொரும்பாலும் அதற்காக பழித்துக் கூறுகிறார்கள் என்று நம்புகிறேன்.... அல்லது பழித்துக் கூறுவதல்ல, ஆனால் பெரும்பாலும் ஜனங்கள் அந்த விதமாகத்தான் கற்பிக்கப்பட்டு இருக்கிறார்கள். சபையானது அதனுடைய மேய்ப்பர் போதிக்கி றதைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் ஒரு போதும் ஜீவிக்காது. நீங்கள் எப்போதாவது அதைக் கண்டு கொள்ளலாம். நீங்கள் ஒரு நல்ல, ஆரோக்கியமான, நல்ல அறிவுள்ள சுவிசேஷப் போதகரைப் பெற்றிருப்பீர்களானால், நீங்கள் வழக்கமாக அம்மாதிரியான சபையையே கண்டு கொள்வீர்கள். அது அப்படியே உங்கள் மேய்ப்பர் உங்களை எங்கே வழி நடத்துகிறார் என்பதாகவும், உங்களைப் போஷிக்கிற மேய்ப்பர்களாகவும் உள்ளது. 4. உங்களுக்குத் தெரியும், நான் அதை.... மத்தியில் கவனித்திருக்கிறேன். என்னிடம் இரண்டு வேதாகமங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று இயற்கையாக உள்ளது. நான் இயற்கையை உன்னிப்பாக கவனிக்கிறேன், தேவன் இயற்கையான தம்முடைய வேதாகமத்தில் ஜீவிக்கிறார். ஒரு குறிப்பிட்ட வகையான நிலத்தில் போஷிக்கப்படும் ஒரு மிருகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அதைக் கவனிப்பீர்களானால், அந்த மிருகமானது அந்த நிலத்தின் நிறத்திற்கு மாறி விடும். உதாரணமாக இதை எடுத்துக் கொள்வோம், நீங்கள் மெக்சிகோவில் இருக்கும் வேட்டையாடி இரை உண்ணும் விலங்காகிய வட அமெரிக்க சிறு ஓநாயை கூட எடுத்துக்கொள்வீர்களானால், நீங்கள் அங்கே அதைக் கவனித்துப் பாருங்கள். அது -அது ஒரு விதத்தில் அந்த சிவப்பு காட்டுப் புதர்செடிகளிலும் மற்றும் காரியங்களிலும் இருந்து, அந்த ஓநாய் சிவப்பாகவே மாறி விடுகிறது. மேலே தேசத்தின் இந்தப் பகுதியிலோ, அல்லது மேலே அதிக தொலைவிலுள்ள இடங்களிலோ, நிச்சயமாகவே, இந்த மேற்கு தேசத்திலோ, அது நிச்சயமாகவே அது ஒரு பழுப்பு நிறமாய் காணப்படுகிறது, அது ஒருவித சற்று நீலம் கலந்த பழுப்பு நிறமாகக் காணப்படுகிறது, ஏனென்றால் அது - அது தேசத்தில் அந்தப் பாகத்தில் உணவு புசிக்கிறது. மானும் அதே விதமாகத்தான் இருக்கிறது. மெக்ஸிகோவில் இருக்கும் அதே சிறிய mule மானானது சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கிறது. இங்கே மேலேயோ, அது சாம்பல் நிறமாகக் காணப்படுகிறது, அது தூரமாக வடக்கிற்குப் போகையில், அது கருமையான நிறத்தில் மாறுகிறது. அது உணவு புசிக்கும் நிலமாக அது இருக்கிறது. 5. இயற்கையைக் குறித்து நீங்கள் வேறொரு காரியத்தைக் கவனித்துப் பாருங்கள், அரிசோனாவிலும் அதைச் சுற்றிலுமுள்ள பாலைவனத்தில் நீங்கள் எப்போதும் அதைக் கண்டுகொள்ளலாம், அங்கே ஒரு ஒரு கூட்ட ஒரு ஒரு... ஐ நீங்கள் கண்டுகொள்ளலாம். அங்கே வெளியே மழையில்லாத அந்த இடத்திலுள்ள எல்லாமே, அது எப்போதுமே அதன் மேல் ஒட்டிக்கொள்ளும் தன்மையைப் (stickers) பெற்றுள்ளது. நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு களைச் செடியும் அதன் மேல் ஒட்டும் தன்மையைப் பெற்றுள்ளது. நல்லது, அப்படியானால் நீங்கள் அந்தக் களைச் செடிகளை எடுத்துக் கொண்டு, அதிக மழை இருக்கும் இங்கே வாருங்கள், அப்போது அதன் மேல் எந்த ஒட்டும் தன்மையும் அது கொண்டிருக்காது. அது ஒரு நல்ல பாடம். பாருங்கள், சபையானது முழுவதும் ஈரமில்லாமல் உலர்ந்து போய், அதில் எந்த ஆவியும் இல்லாதிருக்குமானால், அப்போது அவைகள் எப்போதுமே கொஞ்சம் ஒட்டுந்தன்மையைப் பெற்றிருக்கும் that boosting around. பாருங்கள்? அப்போது, ஒரு நல்ல, பழமை நாகரீகமாக, பரிசுத்த ஆவி மழை உங்களுக்கு அவசியமாயுள்ளது, இல்லையா? அது உங்களை மிருதுவாக (மென்மையாக ஆக்கி விடுகிறது. (ஹா-ஹா-ஹா.) அது சரியே. சபையாகிய நீங்களாகவே அதைச் செய்ய முடியாது. அதைச் செய்வதற்கு உங்களோடு கூட தேவன் அவசியமாயிருக்கிறது. நீங்கள் இல்லாமல் தேவனால் அதைச் செய்ய முடியாது, தேவன் இல்லாமல் உங்களாலும் அதைச் செய்ய முடியாது. 6. திரு. உட் அவர்கள் இன்றிரவு இங்கு எங்கோ இருக்கிறார். அவர் இங்கே திரு. பீலருடைய ஒலிப்பதிவுகளைச் செய்து கொண்டு இருக்கிறார் என்று நம்புகிறேன். கொஞ்ச காலத்திற்கு முன்பு, நாங்கள் கொலராடோவில் இருந்தோம், அப்போது நான் ஒரு ஊற்றைக் குறித்து நினைத்துக் கொண்டிருந்தேன், வழக்கமாக நான் அங்கே மேலே அதன் வழியாகக் கடந்து செல்வேன். இந்தச் சிறிய பழைய ஊற்றானது, நான்.... அது நான் எப்பொழுதும் கண்டதிலேயே மிகவும் சந்தோஷமான ஊற்றாக எப்போதுமே காணப்பட்டது. நான் எப்போதுமே அதிலிருந்து தண்ணீர் குடிக்க விரும்பினேன், ஏனென்றால் அது எப்போதுமே தண்ணீர் குமிழிகளை வெளிவிட்டு, குமிழிகளாக, குமிழிகளாக வந்து கொண்டிருந்தன. ஒரு நாள் நான் உட்கார்ந்து அந்த ஊற்றிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டேன். நான், 'நீ ஏன் நீர்க்குமிழியாக வந்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். நல்லது, நிச்சயமாக அதனால் திருப்பிப் பேச முடியாது, ஆனால் நான் அதற்கான மறுமொழியை உடையவனாய் இருக்கிறேன். பாருங்கள்? நான், "நீ அவ்விதம் துள்ளிக் குதித்துக் கொண்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் காரணத்தினால் நீ ஒருக்கால் சந்தோஷமாய் இருக்கிறாயா, மான்கள் இங்கு வந்து, உன்னிடமிருந்து குடிக்கிற காரணத்தினாலா நீ சந்தோஷமாயிருக்கிறாய். நீ குளிர்ந்த அருமையான தண்ணீராயிருக்கிற காரணத்தினாலா சந்தோஷ மாயிருக்கிறாய்” என்று கேட்டேன். “இல்லை.” ஒருக்கால் கரடிகள் வந்து தண்ணீர் குடிப்பதினாலா." "இல்லை.” நான், "நல்லது, ஒருக்கால் - ஒருக்கால் நான் இங்கு வருவதாலா அவ்விதமாக உன்னைக் குமிழ் விட வைக்கிறது" என்று கேட்டேன். “இல்லை .” நான், "நல்லது, எது உன்னை அவ்விதமாக குமிழ்விடச் செய்கிறது?” என்று கேட்டேன். அதனால் எனக்கு மறுமொழி கொடுக்கக் கூடுமானால், அது, ஓஇப்பொழுது, இதோ பாரும், சகோதரன் பிரன்ஹாம், அது - அது குமிழ்விடுவது நானல்ல; எனக்குப் பின்னாலிருக்கிற ஏதோ ஓன்று தான் என்னை அழுத்தி உந்தித் தள்ளிக் கொண்டு, என்னைக் குமிழ்விட வைக்கிறது' என்று கூறியிருக்கும். எனவே ஒரு கிறிஸ்தவனோடும் அது அந்தவிதமாகத்தான் இருக்கிறது. 7. என்னிடம் இவ்வாறு கூறின ஒரு மனிதனை நான் கொண்டு இருந்தேன், அவர், "இப்பொழுது, பில்லி, நீர் ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்கள் மத்தியில் கடந்து போய்க் கொண்டிருக்கிறீர். அவர்கள் எல்லாரும் உற்சாக மன எழுச்சியினால் உணர்ச்சி வசப்டுகிறார்கள். அங்கே அதற்கு இருப்பதெல்லாம் அவ்வளவு தான். அவர்கள் அப்படியே அலறிக் கூச்சலிட்டுக் கொண்டும், துள்ளிக் குதித்துக் கொண்டும், உரக்க கத்திக் கொண்டும் இருக்கிறார்கள்” என்றார். நல்லது, அவர்கள் அதைச் செய்யும்படி செய்வதற்காக ஏதோ ஓன்று அங்கே இருந்தாக வேண்டும். எனவே அது தான் அது. துள்ளிக் குதிப்பது அவர்களல்ல; அவர்களுக்குள் இருக்கும் ஏதோ ஓன்று தான் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. அது சரியே. நான் இன்றிரவு வெளியே சென்று, அந்த நட்சத்திரத்தைக் குறித்து, எது உன்னைப் பிரகாசிக்க வைக்கிறது? நீ மிகவும் அழகாக இருக்கிறாய். நீ வானங்களிலும் மற்றும் ஒவ்வொன்றிலும் வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய். எது உன்னை அவ்விதம் பிரகாசிக்க வைக்கிறது?” என்று கேட்க என்னால் கூடுமென்றால். அப்போது அதுவால் பேச முடியுமானால், அது, "சகோதரன் பிரன்ஹாமே, பிரகாசித்துக் கொண்டிருப்பது நானல்ல, சூரியன் தான் என் மேல் பிகாசித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறும். பாருங்கள், அது அது தான் அது. பிரகாசித்துக் கொண்டிருப்பது சபையல்ல; பரிசுத்த ஆவி தான் சபையின் மேல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது சரியே. அது தான் ஜீவனையும், சாட்சியையும், கொடுத்து, அவர்கள் எவ்வாறு இருக்கிறார்களோ அவ்வாறு அவர்களை ஆக்குகிறது. 8. சமீபத்தில், நான்... வழக்கமாக இங்கே இந்தியானாவிலுள்ள ஒரு சிறிய மில்டவுன் பாப்டிஸ்டு சபையில் மேய்ப்பராக இருந்தேன். நான் ஜார்ஜ் ரைட் என்ற பெயருடைய ஒரு வயதான மனிதரோடு நின்று கொண்டிருந்தேன். நான் ஒரு இரவில் வீட்டிற்கு வந்து இருந்தேன், அப்போது வெளியே மூலையில் அங்கே ஒரு... இருந்ததைக் கவனித்தேன். நான் ஏறக்குறைய பத்து மணிக்கு உள்ளே வந்த போது, அங்கே ஒரு... இருந்தது. அப்போது நாட்டில், வெப்பமான கோடை காலமாக இருந்தது, வழக்கமாக ஒரு வயதான நைட்டிங்கேல் அங்கே வெளியே உட்கார்ந்து, அது எப்படியாக பாடிக் கொண்டிருக்கும். என்னே, என்னே . பறவைகள் சந்தோஷமாக இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். ஆயினும் அவைகளில் ஒன்றாகிலும் நமக்கிருப்பது போன்று, பெரிய, drawed-down போன்று காணப்படுவதாக ஒரு போதும் நீங்கள் அவைகளைக் காண்பதில்லை, அப்படித்தானே? நீங்கள் ஒரு போதும்.... சிறு பறவையானது மிகவும் அதிகாலையிலேயே எழுந்து, அப்படியே பாடிக் கொண்டே, தன்னுடைய தலையை மேலே உயர்த்தி, தேவனுடைய மகிமைக்கு அப்படியே பாடுகிறது. அவைகளில் ஒன்றுக்காவது உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டு இருக்கவில்லை. அப்படித்தானே? அல்லது அவைகளில் ஒன்றுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டுமென்றும் நீங்கள் ஒருக்காலும் கேள்விப்பட்டதில்லை, தானே? அது அப்படியே தன்னுடைய சிருஷடிகரை மகிமைப்படுத்துகிறது. அவ்வளவு தான். ஆனால் நாம் சில சமயங்களில் எந்த நோக்கமும் இல்லாமல் சுற்றித் திரிகிறோம். 9. இந்தச் சிறு நைட்டிங்கேல் பறவையானது, அது அப்படியே பாடி, பாடி, தொடர்ந்து பாடிக்கொண்டேயிருந்தது. நானோ, "நல்லது, எது அதை இரவு முழுவதும் பாடும்படி செய்கிறது?" என்று நினைத்தேன். மேகமூட்டமான ஒரு இரவில் நான் அதைக் கவனித்தேன், அப்போது அது பாடும், அதன் பிறகு அதை நிறுத்திக் கொள்ளும், பிறகு பாடும், அதன்பிறகு அதை நிறுத்திக்கொள்ளும். நைட்டிங்கேலின் வாழ்க்கையைக் குறித்து நான் படிக்க வேண்டியிருந்தது. எனவே நைட்டிங்கேல், அது என்ன செய்கிறது, அது முழுவதும் பரலோகத்தையே - அது எப்போதுமே வானத்தை நோக்கிப் பார்க்கிறது. ஒரு நட்சத்திரத்தையோ, அல்லது எந்த விதமான ஒரு வெளிச்சத்தையோ அதனால் காண முடியும்போது, அது பாடத் தொடங்கும், ஏனென்றால் அந்த நட்சத்திரத்தின் மீது பிரகாசிக்கும்படியாக சூரியனானது எங்கோ ஓரிடத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்பதை அது அறிந்திருக்கிறது. நல்லது, ஒரு நல்ல, பழமை நாகரீகமான, பரிசுத்த ஆவி கூட்டத்தைக் குறித்தும் நான் அவ்விதமே நினைக்கிறேன். ஒரு நல்ல பழைய மனம் உவந்த, ஆமென்” என்பதையோ, அல்லது யாராவது ஒருவர் மேலே குதித்து, சிறிது சத்தமிட்டு கத்துவதை எப்போதாவது என்னால் கேட்க முடியும் போது, குமாரன் எங்கேயோ பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறேன். அவ்வளவு தான். அது அப்படியே ஒருவிதத்தில் அம்மாதிரியான மிகவும் நல்லதொரு உணர்வை உங்களுக்குக் கொடுக்கிறது. இந்தக் கூட்டங்களில்... கொஞ்ச காலத்திற்கு முன்பு யாரோ ஒருவர் சொன்னார், அவர்கள் எனக்கு ஒரு சிறு கடிதத்தை எழுதி, "சகோதரன் பிரன்ஹாமே, உம்முடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள தேவன் சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களை எழுப்பி இருக்கிறார்” என்று சொன்னார்கள். நான், "நல்லது, யாரோ ஒருவர் அந்த வேலையில் இருப்பது எனக்கு சந்தோஷமாக உள்ளது” என்றேன். 10. அவர், அதற்குக் காரணம் நீர் போதுமான ஜனங்களுக்கு ஜெபிப்பதில்லை" என்றார். அவர், "நீர்... ஜனங்கள் உம்முடைய கூட்டத்திற்கு வருகிறார்கள், அவர்களுக்காக ஒரு போதும் ஜெபிக்கப்படுவதில்லை என்று அவர்கள் உணருகிறார்கள். நீர் ஒரு சிலரைத் தான் மேடைக்கு கொண்டு வருகிறீர், சற்று கழிந்து, நீர் முழுவதும் பலவீனமாகி, அவர்கள் உம்மை வெளியே கொண்டு சென்று விடுகிறார்கள். நீர்... உம்முடைய சுயநினைவுக்கு வருவதற்கு அரை மணி நேரமாக உம்மை சுற்றிலும் வலிந்து இழுத்துச் செல்கிறார்கள். அவர்களுக்காக ஒரு போதும் ஜெபிக்கப்படவில்லை. நீர் நீர் அவர்களிடம் வர முடியவில்லை" என்றார். நல்லது, அது உண்மையாக உள்ளது. அது சரியாக உள்ளது. ஆனால் நீங்கள் பாருங்கள்.... அவர், "நீர் இரண்டு பேருக்காக ஜெபிக்கையில், சகோதரன் ராபர்ட்ஸ் அவர்கள் ஐநூறு பேருக்காக ஜெபிப்பார்” என்றார். அது சரியே. என்ன செய்ய வேண்டுமென்று தேவன் சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களிடம் சொல்வதை அவர் செய்து கொண்டிருக்கிறார், என்ன செய்ய வேண்டுமென்று தேவன் என்னிடம் சொன்னதை நான் செய்து கொண்டிருக்கிறேன். புரிகிறதா? அது - அது தான் வித்தியாசம். பாருங்கள், பாருங்கள்? எனவே, நாம்... நான் சகோதரன் ராபர்ட்ஸாக இருக்க முடியாது; சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களும் நானாக முடியாது. நாங்கள்.... கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய எங்களில் ஒருவர் (அது சரியே.) தேவனுடைய மகிமைக்காக எவ்வாறு ஊழியம் செய்வது என்று நாங்கள் அறிந்திருக்கிற மிகச் சிறந்த விதத்தில் ஜனங்களுக்கு ஊழியம் செய்ய முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம். மேலும் எனவே, சகோதரன் ராப்ர்ட்ஸ் ஒருவித... ஐ உடையவராயிருக்கிறார். ஒரு விதத்தில் உண்மையிலேயே, பலமான, அதிகாரத்தை தேவன் அவருக்குக் கொடுக்கிறார், நான் சொல்லுவதை நீங்கள் மன்னிப்பீர்களானால், அது "விடாப்பிடியான விசுவாசம்.” அவர் அப்படியே அங்கே எழுந்து நின்று, இறுகப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதற்காகவும் அவர் விசுவாசிக்கிறார். மேலும் அவர்... பிசாசினால் பீடிக்கப்பட்ட அல்லது ஏதோவொன்று அல்லது வேறொன்றை, அல்லது புற்று நோய், அல்லது கட்டியை உடைய யாரோ ஒருவர் மேலே வருகிறார், அவர் தன்னுடைய கால்களை தரையில் உதைத்து, உரத்த சத்தமிடுவார், வேறு எதுவுமல்ல, அதை பயமுறுத்தி விரட்டி விடுவார். ஆயினும் அவர்-அவர் வேலையை செய்திருக்கிறார். அதெல்லாம் சரி தான். ஜனங்கள் சுகமடைந்து கொண்டு இருக்கிறார்கள், எனவே நான், "கர்த்தருக்குத் துதி உண்டாவதாக” என்று கூறுகிறேன். நிச்சயமாக. 11. இப்பொழுது, என்னால் அதைச் செய்ய முடியவில்லை (பாருங்கள்?), ஏனென்றால் நான் சகோதரன் ராபரட்ஸ் அல்ல. புரிகிறதா? இப்பொழுது, அவர் பெற்றிருக்கிற; இறுகப்பற்றிக் கொண்டிருக்கும், அந்த உண்மையான விசுவாசம் எனக்குப் பிடிக்கும். சகோதரன் ஜாகர்ஸ்-ம் அவர்களில் அநேகரும், சகோதரன் ஃபிரீமன் அவர்களும், ஃபிளீமன், ஃபிரீமன், அதுதான் என்று நம்புகிறேன், அந்த மற்றவர்களில் அநேகர் அந்த உண்மையான இறுகப்பற்றிக் கொண்டிருக்கும் விசுவாசத்தைப் பெற்றிருக்கிறார்கள். நான் அதை, "சுகமளித்தலின் வரங்கள்” என்று அழைக்கிறேன். அவர்கள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்களோ அதை அவர்கள் விசுவாசிக்கிறார்கள். அவர்கள் வைக்கிறார்கள்.... அவர்கள் இங்கே கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்து, அதை வார்த்தையில் வாசிக்கிறார்கள்: இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று (வாசித்து), "இங்கே மேலே வாருங்கள். நான் சரியாக இப்பொழுதே அதற்கு சவால் விடுகிறேன், அதற்குப் பிறகே போக நான் ஆயத்தமாயிருக்கிறேன்" என்று கூறுகிறார்கள். எனக்கு அது பிடிக்கும். நான் அந்த சகோதரர்களுக்காக எல்லா நேரமும் ஜெபிக்கிறேன். "தேவனே, அவர்களை அனுப்பும், அது தொடரட்டும். எங்களால் கூடுமானால், தேசத்திலுள்ள ஒவ்வொரு அசுத்த ஆவியையும் ஓட்டும் (run out)" அதைச் செய்ய வேண்டிய வழி அது தான். நிச்சயமாக. 12. இப்பொழுது, அது எனக்குப் பிடிக்கும். அந்த சகோதரர்களுடைய உண்மையான, ஆதிக்கம் செலுத்தும், overjumping விசுவாசத்தை நான் பாராட்டுகிறேன். நீங்கள் பாருங்கள்? அவர்கள் அப்படியே எதையும் சவால் விட்டு, அதைக் கெட்டியாய்ப் பற்றி, அதைப் பிடித்துக் கொள்கிறார்கள். நான் அதை விரும்புகிறேன். நானோ ஒரு வித்தியாசமான நபர். நான் ஒருவிதத்தில் மெதுவாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் ஒருவிதத்தில் என்னுடைய காலடிகளை எங்கு வைக்கிறேன் என்றும், ஒருவிதத்தில் எந்தக் குறிப்பிட்ட இடத்தில் நான் நடந்து கொண்டிருக்கிறேன் என்றும் கவனித்துப் பார்க்கிறேன். மேலும், ஓ, எனக்கே தெரியாது, நான் ஒரு விதத்தில் வினோதமான ஒரு ஆளாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இப்பொழுது, தேசத்தின் சில பாகங்களில் அது சரியாகவே போகிறது, சில பாகங்களில் அது சரியாகப் போவதில்லை. ஆனால் ஒரு சுகமளித்தலின் வரத்தை என்னால் கூற முடியும் என்று நான்-நான் நினைக்கிறேன், ஏனென்றால் சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிருக்கிற எவரும் சுகமளித்தலின் வரத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு வரமும் விசுவாசத்தின் மூலமே இயங்குகிறது. அது சரி தானா? உங்களால் கொண்டிருக்கக் கூடியது எல்லாமே அவ்வளவு தான், அது அதை விசுவாசிக்கும்படியான விசுவாசமாக இருக்கிறது. 13. இப்பொழுது, வேறொரு நபரைச் சுகமளிக்கக் கூடியவர்கள் யாருமே கிடையாது, சகோதரன் ஜாகர்ஸ் அவர்களோ, சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களோ, அல்லது நானோ, அல்லது வேறு யாருமோ மற்றொரு நபரைச் சுகமளிக்க முடியாது. அவ்வாறு உரிமை கோருபவர்கள் நம்மில் யாருமே கிடையாது. நம்மால் ஜனங்களைச் சுகமாக்க முடியாது. அவர்களை ஏற்கனவே சுகமாக்கிவிட்ட அந்த மனிதரை நோக்கிப் பார்க்கும்படியாக அவர்களைக் கொண்டு வர மாத்திரமே நாங்கள் முயற்சிக்கிறோம்: அந்த மனிதர் தான் இயேசு கிறிஸ்து, அதை விசுவாசத்தின் மூலமாக ஏற்றுக்கொள்ளும்படி அவர்களைக் கொண்டு வருகிறோம், அது அதைத் தீர்த்து வைக்கிறது. அவர்... அங்கே பின்னால் இயேசு அவர்களைச் சுகமாக்கின போது... இயேசு கல்வாரியில் மரித்த போதே வியாதிப்பட்ட ஒவ்வொரு நபரும் சுகமடைந்து விட்டான் என்று விசுவாசிக்கி றேன். அதை என்னால் வேதாகமத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியும். அவருடைய தழும்புகளால், நாம் சுகமானோம் (கடந்த காலம்). இயேசு கல்வாரியில் மரித்த போதே, உலகத்திலுள்ள ஒவ்வொரு பாவியும் மன்னிக்கப்பட்டு விட்டான். ஆனால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் மட்டுமாக அது ஒரு போதும் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது. புரிகிறதா? நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதன் பிறகு அது உங்களுக்கு சொந்தமான சொத்தாக ஆகிவிடுகிறது. அப்போது உங்களால் இங்கே பீடத்தண்டையில் வர முடிந்தது; நீங்கள் வர வேண்டிய அவசியம் இல்லாதிருந்திருக்கும், ஆனால் எனக்கு பீடங்களில் விசுவாசம் உண்டு. பீடத்தண்டையில் முழங்கால் படியிட்டு (Get down), உங்களால் கதறி அழ முடிந்தது; உங்களால் ஜெபிக்க முடிந்தது; பீடத்தில் மேலும் கீழும் நடக்க உங்களால் முடிந்தது; உங்களுடைய தலைமுடியை பிடித்திழுக்க உங்களால் முடிந்து, அப்படியே செய்து கொண்டிருந்தீர்கள், ஆனால் உங்களை இரட்சிப்பது அதுவல்ல. இப்பொழுது, அவை எல்லாவற்றையும் நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. ஆனால் உங்களை இரட்சிப்பது அதுவல்ல. நீங்கள் விசுவாசிக்கும் மட்டுமாக நீங்கள் ஒரு போதும் இரட்சிக்கப்படவே மாட்டீர்கள். அது சரிதானா? 14. நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் உண்மையாகவே அதை விசுவாசிக்கும் போது, நீங்கள் பீடத்திலோ, வெளியே தெருவிலோ, அல்லது அது எந்தவிடமாக இருந்தாலும் காரியம் இல்லை, நீங்கள் அதை விசுவாசித்து, அதை ஏற்றுக் கொள்ளும் போது, அது உங்களுக்கு சொந்தமான சொத்தாகவும், கிருபையின் மூலமாக தேவனுடைய ஒரு வரமாகவும் ஆகி விடுகிறது. தேவன் உங்களை முதலில் இழுக்கும் வரையில், நீங்கள் தேவனுடைய சரியாகும்படியான எந்த எண்ணத்தையும் உங்களால் கொண்டு இருக்க முடியாது. எனவே அப்படியானால் அது தெரிந்து கொள்ளுதலின் மூலமாகவே வருகிறது, இல்லையா? தங்களுடைய இருதயக்கதவை தேவன் எப்பொழுதாவது தட்டினதை கேட்ட இங்கிருக்கும் ஒவ்வொருவரும் உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான நபராக இருக்க வேண்டும். நிச்சயமாக. ஏனென்றால் அவர் தங்களுடைய இருதயத்தை ஒரு போதும் தட்டவே செய்யாத சில ஜனங்கள் இருக்கிறார்கள். அவர் -அவர் தட்டுவார், ஆனால் அவர் தேவனாக இருக்க வேண்டுமானால், அவர் துவக்கம் முதல் முடிவு வரை அறிந்தவராயிருக்கிறார். யாரும் கெட்டுப் போவது அவருக்குச் சித்தமல்ல. நல்லது, நீங்கள், "பிரசங்கியாரே, அப்படியானால் நீங்கள் எப்படி சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுகிறீர்கள்? உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கலாம். அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. 15. இதோ ஒரு சுவிசேஷ பிரசங்கியார் இருக்கிறார்... தேவனுடைய இராஜ்யம் ஒரு மனிதன் சென்று கடலில் வலையை வீசுவதற்கு ஒப்பாயிருக்கிறது, அவன் வலையை இழுத்த போது, அது தான் சுவிசேஷம். அவன் அதை இழுத்த போது, அங்கே உள்ளே கொஞ்சம் மீன்கனை அவன் உடையனாயிருந்தான். அங்கே உள்ளே சில கடல் நண்டுகள் அவனுக்கு இருந்தது. சில ஆமைகளையும் அவன் அங்கே உள்ளே உடையவனாயிருந்தான். அங்கே சில பாம்புகளையும் அவன் உள்ளே உடையவனாய் இருந்தான். சில தண்ணீர் பூச்சிகளும் (water-bugs) அவனுக்கு இருந்தது. அங்கே உள்ளே அவன் எல்லாவற்றையும் கொண்டு இருந்தான். சுவிசேஷ வலை அவர்கள் மேல் இருந்த காலம் வரையில், அவர்கள் எல்லாரும் ஒரே வடிவாகவே காணப்பட்டனர். ஆனால் அவன் வலையை மேலே உயர்த்தின போது, அவன் அப்படியே கவனித்தான், ஒரு எழுப்புதலைப் போன்று அது இருக்கிறது... பிரசங்கியார் சுவிசேஷ வலையைப் போடுகிறார்; அவரால் கூடுமான எல்லாவற்றையும் இங்கே மேலே இழுக்கிறார். நல்லது, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அந்த வயதான ஆமை மேலே நோக்கிப் பார்த்து, அங்கே அதில் எதுவுமில்லை ” என்று கூறிவிட்டு, இதோ அது மறுபடியும் சரியாக அந்தச் சேற்று குட்டைக்கே சென்று விடுகிறது. நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், இதோ அந்தப் பெரிய வயதான தண்ணீர் பூச்சி பிளாப், பிளாப், பிளாப், பிளாப் என்று இருக்கிறது, தவளையும் கூட இருக்கிறது, உங்களுக்குத் தெரியும், அதனால் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக திரும்பவும் சரியாக குட்டைகளுக்கே போய் விடுகிறது. "அங்கே அதில் எதுவுமில்லை . யாரோ கால் விரல்களில் மிதித்து விட்டார்கள். அங்கே மேலேயிருக்கும் மாய்மாலக்காரர் களினாலே அங்கே எதுவுமே கிடையாது. நான் தங்கியிருக்கப் போவதில்லை .” அது தூரமாகப் போய் விடுகிறது. அந்த வயதான பாம்பு, சர்ப்பம், "நான் உங்களிடம் சொன்னேனே. அந்த ஸ்திரீ அப்படியே.... இருந்தாள் என்று அறிந்து கொண்டேன்.” அதோ அது மறுபடியும் சரியாக தண்ணீருக்கே போய் விடுகிறது. 16. ஆனால் அங்கே உள்ளே சில மீன்களும் கூட இருக்கின்றன. பாருங்கள்? எனவே, அது என்னுடைய வேலையல்ல. நான் அப்படியே வலையை வீசி, அதை இழுக்கிறேன். எது மீனாயிருக்கிறதோ அதை தேவன் வெளியே எடுக்கிறார். அது சரிதானா? தேவன் மீனை எடுத்துக் கொள்கிறார். அதனோடு செய்வதற்கு எனக்கு எதுவும் கிடையாது. நான் அவருடைய புத்தகங்களை காத்துக் கொள்வதில்லை. யார் யாராக இருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனால் நாமோ சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ண வேண்டியதாயிருக்கிறது. இரட்சிப்பது தேவனைப் பொறுத்ததாயுள்ளது. மேலும் இப்பொழுது, நீங்கள் இரட்சிக்கப்படும் போது, சரியாக அப்போது தான் சரியான பாதையை அடைகிறீர்கள். சமீபத்தில் ஒரு ஊழியக்காரர் என்னிடம் சொன்னார். அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைத் தேடிக் கொண்டிருப்பதாக கூறினார். அவர் ஒரு மகத்தான மனிதர். அவர், "சகோதரன் பிரன்ஹாமே, நான் பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டேன் என்று விசுவாசிக்கிறேன்” என்று கூறினார். நான், "நல்லது, விசுவாசித்தல் அதை உங்களுக்குக் கொடுத்து விடாது, சகோதரனே. அது தேவனுடைய ஒரு வெகுமதி (gift)" என்றேன். மேலும் அவர், "இதோ பாரும், சகோதரன் பிரன்ஹாம், ஆபிரகாம் விசுவாசத்தினாலே தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதே” என்றார். நான், அது சரிதான். முற்றிலும் சரியே. ஆனால் அவனுடைய விசுவாசத்தின் ஒரு ஞாபகச் சின்னமாக அவர் அவனுக்கு ஞாபகார்த்தமாக விருத்தசேதனம் என்னும் அடையாளத்தைக் கொடுத்தாரே" என்றேன். மேலும் இன்றைக்கு, நாம் விசுவாசிப்பமாக நாம் கூறிக்கொள்ளும்போது, நாம் -நம்மால் ஒரு அளவில் தான் விசுவாசிக்க முடியும், ஆனால் தேவன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நமக்குக் கொடுக்கும்போது, அவர் நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தி, நம்மை முத்திரை இடுகிறார். "நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும் முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என்று எபேசியர் 4:30 (கூறுகிறது.) பரிசுத்த ஆவி என்பது தேவனிடத்திலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதிப்பாடாக உள்ளது. தேவன் அதை உறுதிப்படுத்தி, அதை அவ்விதமாய் அடையாளம் கண்டு கொண்டு, உங்கள் மேல் அங்கீகாரத்தின் முத்திரையை இடுகிறார். அது தான் நமக்குத் தேவை, இல்லையா? சபைக்கும் அது தான் அவசிமாயுள்ளது. அது தான் உங்களை ஜீவனுள்ளவர்களாக வைக்கிறது. 17. இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலுக்குத் திரும்பி வருவோம். நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்... சகோதரன் பாஸ்வர்த், நெடுகிலும் எல்லாருமே அதைக் குறித்து என்னிடம் கூறி இருக்கிறார்கள். அவர், "சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் நம்புகிறேன், ஒரு முறை கூட்டங்களில் உம்மிடத்தில் வித்தியாசமான ஏதோவொன்றை நீர் செய்திருந்தீரானால்..... நீர் வழக்கமாக செய்யும் அதையே பெற்றிருக்கிறீர், மேலும் - மேலும் எனவே, நீர் வித்தியாசமான ஏதோவொன்றை செய்திருந்தால், இன்னும் அதிகமான ஜனங்களை நீர் பெற்றிருப்பீர் என்று நம்புகிறேன்” என்றார். எனவே கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவில், தொடங்கும் போது, நான் மேடைக்கு இறங்கி வரப் போகிறேன், கர்த்தருக்குச் சித்தமானால், சற்று நேரம் பிரசங்கித்து விட்டு, நமக்கு நிறைய நேரம் கிடைக்கையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று இரவுகளுக்கு நம்மால் ஜெபிக்க முடியாமல் போகிறதா என்று பார்ப்போம், யாருமே துரிதப்படவில்லை . ஓ, நம்மிடம்... உள்ளது. இங்கே உள்ளே எத்தனை பேர் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள்? இங்கே உள்ளே மறுபடியும் பிறந்திருக்கிறவர்கள் எத்தனை - எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று பார்ப்போம். நல்லது, நாம் என்றென்றுமாக அதைப் பெற்றிருக்கிறோம். அது சரிதானா? நாம் அப்படியே சிறிய- சற்றே சிறிய முன் - யூபிலியை இங்கே கொண்டு இருக்கிறோம். நாம் என்றென்றுமாய் அதைப் பெற்று இருக்கிறோம். நாம் எங்கேயும் போய் விடுவதில்லை. எனவே நாம் என்றென்றுமாக ஜீவிக்கப் போகிறோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், இல்லையா? எனவே நாம் ஏன் பெரிய அவசரகதியில் இருக்கிறோம்? நாம் ஏன் மணிக்கு 90 மைல் வேகத்தில் காரோட்டிச் செல்கிறோம்? பாருங்கள்? நாம் அப்படியே நம்முடைய நேரத்தை எடுத்துக் கொள்வோம். நாம் நல்ல நிலையில் இருப்போம், நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? நாம் நம்முடைய நேரத்தை எடுத்துக் கொள்வோமேயானால், எனவே நாம் நம்முடைய நேரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தர் என்ன செய்வார் என்று பார்ப்போம். இப்பொழுது, இதோ.... இந்த இடத்திற்கு வழிநடத்துகிறோம், நான் நான் துரிதமாய் முடிக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் ஜனங்களுக்காக ஜெபிக்கும் முன்பாக எனக்கு இன்னும் ஒரு சில நிமிடங்களே உள்ளன. 18. நான் இந்த...ஐ நம்புவதில்லை. நீங்கள் இன்றிரவு சிறு கூட்டமாக இருந்த முதற்கொண்டு, நான் ஒரு அறிக்கை பண்ணப்போகிறேன். இம்மாதிரியான கூட்டங்களுக்காக தேவன் எப்பொழுதாவது ஒரு வரத்தை நோக்கம் கொண்டிருந்தார் என்று நான் நம்புவதில்லை. ஏனென்றால் அது-அது-அது ஒரு மகத்தான வேலையை செய்து இருக்கிறது. அது ஒரு தெய்வீக வரமாக இருக்கிறது. என்னுடைய பயபக்தியான நியாயாதிபதியும், நான், இங்கே நிற்பவருமாகிய தேவன் நான் உங்களிடம் உண்மையாயிருக்கிறேன் என்பதை அறிவார். அது உண்மை என்று தேவன் உங்களுக்கு அதை நிரூபித்திருக்கிறார் என்று நம்புகிறேன். இப்பொழுது, அது ஒரு தீர்க்கதரிசன போதிப்பாக (prophetic utterance) பிறந்தது என்று நான் -நான் நம்புகிறேன். ஓ, அநேக ஜனங்கள் ஒரு காரியமாகவோ, வேறொரு காரியமாகவோ, அதைப் போன்ற மற்றவைகளாகவோ அதை அழைக்கிறார்கள். அது என்னவென்று எனக்குத் தெரியாது, எனவே கர்த்தர் என்னை நேசிக்கிறார், நானும் அவரை நேசிக்கிறேன், அது அதை என்னோடு தீர்த்து வைக்கிறது. எதுவுமாக இருக்க வேண்டாம், அதை எதுவுமாக அழைக்கவும் வேண்டாம், எனவே அது கர்த்தராகிய இயேசுவுக்காகவும் அவருடைய ஜனங்களுக்காகவும் முடிவுகளை பெற்றுக் கொள்கிறது. அது தான் பிரதான காரியமாகும். அது மற்ற அநேகருக்கு காரணமாக அமைந்தது, ஒன்றுக்காக சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களும், சகோதரன் ஜாகர்ஸ் அவர்களும், பொரும்பாலான அவர்களில் எல்லாரும், அவர்கள் நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே வந்து அமர்ந்து, கர்த்தர் கிரியை செய்வதை கண்டார்கள்; அது அவர்களுடைய விசுவாசத்தை தூண்டி, இதோ நாங்கள் போகிறோம்” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் வெளியே சென்று, கர்த்தருக்காக ஏதோவொன்றைச் செய்தார்கள். இந்தக் கூட்டத்திலிருந்தும் அதே விதமாகவே ஐம்பது பேர் வருகிறார்கள் என்று நம்புகிறேன். அது சரியே. வெளியே போய் ஏதாவது செய்யுங்கள். அதெல்லாமே தேவனுடைய இராஜ்யத்துக்காகவே, எல்லாமே அவருடைய மகிமைக்காகத்தான். 19. அந்த சிறு இடத்துக்குப் பின்பாக சகோதரன் ராபர்ட்ஸ் அவர்கள் திரும்பிச் சென்ற போது, அது எனக்கு நினைவு இருக்கிறது.... சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, சகோதரன் ராபர்ட்ஸ் அவர்கள் அங்கே திரும்பி வந்து, அங்கு அதனுள்ளே ஒரு டஜன் அல்லது இரண்டு டஜன் ஜனங்களோடு ஒரு சின்னஞ்சிறிய கூடாரக் கூட்டத்தைக் கொண்டிருந்த போது, அந்த இரவில் நீங்கள் அங்கே கான்ஸாஸ் பட்டணத்தில் இருந்தீர்கள். அவர், "சகோதரன் சகோதரன் பிரன்ஹாமே, தேவன் பதிலளிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். நான், "உத்தமமாயிருக்கும் எந்த மனிதனுடைய ஜெபத்திற்கும் தேவன் பதிலளிப்பார்” என்றேன். அது சரியே. எனவே அவர் அங்கிருந்து போய் விட்டார். இது இங்கேயிருக்கிறது. இப்பொழுது, தரிசனம்... இப்பொழுது, அவர்.... நான்.... இது அப்படியே... நான் தெய்வீக சுகமளித்தலைத் தவிர வேறு எந்த உபதேசத்தையும் இந்தக் கூட்டங்களில் பிரசங்கம் பண்ணுவதில்லை. இது நீங்கள் விசுவாசிப்பதற்கு முரணமாக இருக்குமானால், நான் செர்ரி பை (cherry pie)-ஐ சாப்பிடும் போது, நான் செய்வது போன்று செய்து விடுங்கள். ஒரு செர்ரி பையில் ஒரு கொட்டை அகப்பட்டால், நான் பையை எறிந்து விடுவதில்லை, நான் கொட்டையை தூர எறிந்து விட்டு, தொடர்ந்து பையைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். பாருங்கள்? இதைக் குறித்து நீங்கள் விசுவாசிப்பது, நீங்கள்.... அதெல்லாம் சரிதான், நீங்கள்.... பாருங்கள்? ஏன், நீங்கள் அப்படியே அதை தூர எறிந்து விடுங்கள், ஆனால் நீங்கள் சரி என்று நினைப்பதை தொடர்ந்து புசித்துக் கொண்டே இருங்கள். 20. எபேசியர் 1-ம் அதிகாரத்தின்படி, உலகத்தோற்றத்துக்கு முன்பே, தேவன் நம்மை அறிந்து, உலகமானது எப்பொழுதாவது உண்டாவதற்கு முன்பே, சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும் படியாக, அவர் என்னையும் மற்ற ஊழியக்காரர்களையும், மற்றவர்களையும் அனுப்பினதை அறிந்திருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். அது வேதாகம போதகம் என்பதை நான் விசுவாசிக்கிறேன். அது நிறைய கால்வீனிய பாகத்தை அதற்குப் பெற்றிருந்தது. கால்வீனிய உபதேசத்தைப் பின்பற்றுபவர்கள் சரியாகத்தான் இருந்தார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் பெற்றிருந்தனர் ஒரு - நிலை நிற்கும்படியாக அவர்கள் ஒரு வேத பாகத்தைப் பெற்றிருந்தார்கள். அவ்வாறே ஆர்மீனியனும் கொண்டிருந்தான், ஆனால் அவர்கள் இருவருமே வெறுமையாகி, ride on limbs, பிரிந்து போய், பிரச்சினைகளை உண்டாக்கிக் கொண்டார்கள். தேவன் அப்படியே முழு காரியத்தையும் பின்னால் கொண்டு சென்று, அதை எபேசியர் புத்தகத்தில் வைத்து விட்டு, அதை நேராக்கி விட்டார். அது சரியே, அது முற்றிலும் சரியே. எனவே, நாமும் அங்கேதான் இருக்கிறோம். ஒருவர் இந்த வழியாக போகிறார். ஒருவர் இந்த வழியாகப் போகிறார். ஒருவர் இந்த வழியாகவும், அந்த வழியாகவும் அடிப்படையாக ஓடுகிறார். அந்தவிதமாகத்தான் சபையானது எப்போதுமே போயிருக்கிறது. அது மனிதனாக இருக்கிறது. உங்களுக்குப் புரிகிறதா? அவன் தேவனால் வழி நடத்தப்பட விரும்புவதில்லை. ஆனால் நாம் சகோதரர்களாய் இருக்கிறோம் என்றும், நாமெல்லாரும் ஒரு இடத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து விடும் ஒரு கட்டத்தை நாம் எப்போது அடைகிறோமோ, அப்போதே நாம் தேவனை விட்டு விலகிச் சென்று விட்டோம். நாம் நம்முடைய தனித் தன்மையில் கூட ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டு கொண்டாக வேண்டும். 21. உயரமும் ஒல்லியாயும், இளம் பொன்நிறமான தலைமயிரும், சண்டைக்கார மூக்கையும், அழகான தோலையும் கொண்டு இருக்கிற ஒரு சகோதரன் எனக்குண்டு; அவன் என்னைப் போன்று காணப்பட மாட்டான். நாங்கள் ஒன்று போல நடந்து கொள்வதில்லை. நாங்கள் - நாங்கள் சகோதரர்களாக இருந்தோம் என்பதை நீங்கள் ஒரு போதும் அறிந்திருக்கவே மாட்டீர்கள். ஆனால் அவனுடைய தகப்பன் தான் என்னுடைய தகப்பனும். அவன் காணப்படுகிற விதமாக தோற்றத்தை குடும்பமானது ஏற்றுக் கொண்டிருக்குமானால், நான் காணப்படுகிற விதமான தோற்றத்தோடு என்னை ஏற்றுக் கொண்டிருப்பார்களானால், நாங்கள் சகோதரர்களாக இருக்கும்படியாக ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொள்கிறோம். அது சரியே. எனவே இந்த கிறிஸ்தவ மண்டலத்திலும் நாம் அவ்விதமாகவே செய்தாக வேண்டும். நாம் விசுவாசித்து, ஒருவர் மற்றவரிடத்தில் விசுவாசம் கொண்டு இருந்தாக வேண்டும். கிறிஸ்தவர்கள் ஒருவர் பேரில் மற்றவர்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தை இழந்துவிடும் போது, சரியாக அப்போதே அந்தச் சபையை பிசாசு பிடித்துக் கொள்கிறான். அது சரியே. நாம் ஒருவர் மற்றவரிடத்தில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் கொண்டு இருந்தாக வேண்டும், ஒருவர் (பாரத்தை) ஒருவர் சுமக்க வேண்டும். 22. இப்பொழுது, இதில்.... ஒரு சின்னஞ்சிறிய குழந்தையாக இருக்கும் போதே, நான் தரிசனங்களை கண்டேன். என்னுடைய ஜீவியம் முழுவதும் ஆரம்பத்தில் இருந்தே, ஒவ்வொரு கட்டத்திலும் நான் தரிசனங்களைக் கண்டேன். நீங்கள் அநேக நேரங்களில் அந்தக் கதையைக் கேட்டும், அதை வாசித்தும் இருக்கிறபடி, என்ன செய்ய வேண்டுமென்று தூதனானவர் என்னிடம் வந்து, கூறின போது, சரியாக அப்போது அல்ல, ஆனால் அது - அது இருந்தது - அது என்னுடைய வாழ்க்கை முழுவதும் இருந்தது. அது எப்போதுமே என்னிடம் இருந்து வருகிறது, வழக்கமாக ஏதோ ஓன்று, அந்த சுகமளிக்கிற வரிசைகள் வழியாகவும், மற்ற இடங்களிலுள்ள மற்றவைகள் வழியாகவும் போன அம்மாதிரி-யான ஜனங்கள், வழக்கமாக அதைத்தான் நான் பெற்றுக் கொள்கிறேன், அந்த மீதமுள்ளவர்களை நான் கொண்டு இருக்கிறேன். ஏதோவொரு இடத்தில் சுகமளிக்கும் வரிசைகளில் இருந்து வருகிற ஜனங்கள், சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுதலின் கீழாக போதுமான உரிய விசுவாசத்தைக் கொண்டிருப்பதைத் தவற விட்டு விடுகிறார்கள், அப்போது அவர்கள் மறுபடியுமாக கூட்டத்திற்குள் பழைய நிலைக்கு போய் விடுகிறார்கள் (drop back). நல்லது, அது என்ன செய்கிறது... அது ஒரு நல்ல காரியம். அதன் பிறகு அம்மாதிரியான (ஜனங்களைப் பிடிக்கும்படியாக தேவன் இங்கே ஒரு வலுவூட்டலைத் திரும்பவும் கொண்டிருக்கிறார். புரிகிறதா? இப்பொழுது, அது நல்லது. 23. இப்பொழுது, உதாரணமாக, நான்... இருக்க நேர்ந்தது, சற்று முன்பு நான் ஒரு நண்பரை சந்தித்தேன். நான் - அவர் இங்கே இருக்கிறாரா என்று காண நான் நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர் இருக்கிறார். அநேக வருடங்களில், அவரை முதல் முறையாக நான் கண்டேன். தெய்வீக சுகமளித்தலின் ஊழியத்துக்கு நான் சென்ற போது, என்னுடைய முதலாவது அழைப்புகளில் ஒன்றாக இது இருந்தது. அவர் செயின்ட் லூயிஸில் இருந்தார்... அதைக் குறித்து நான் பேசுவதை உங்களில் அநேகர் கேட்டிருக்கிறீர்கள்... நான் முதலாவது பாப்டிஸ்டு சபையில் நியமிக்கப்பட்ட போது, என்னுடைய கூட்டங்களில் அநேக தடவைகளில், நான் வழக்கமாக என்னுடைய கரத்தின் கீழாக ஒரு வேதாகமத்தைச் சுமந்து கொண்டு, சுற்றிலும் நடந்து கொண்டு ருப்பேன், நான் ஒரு பிரசங்கியார் என்று நினைத்துக்கொண்டேன். இப்படியிருக்க நான் ஒரு நாள் ஒரு கூடாரக் கூட்டத்திற்குப் போக நேரிட்டது. அங்கு ஒரு மனிதர் பிரசங்கம் பண்ணுவதை நான் கேட்டேன், அவர் முழுவதுமாக மூச்சைப் பிடித்துக் கொண்டு, அவருடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று வளைந்து மாட்டிக் கொண்டு, தம்முடைய மூச்சைப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு அவர் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தார். ஏறக்குறைய இரண்டு சதுர வட்டார தூரத்திற்கும் உங்களால் அவருடைய சத்தத்தைக் கேட்க முடிந்தது, அவர் பிரசங்கம் பண்ணுவதற்காக மீண்டும் மேலே வந்தார். நான் அநேக நேரங்களில் அதைக் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அம்மனிதர் இன்றிரவு இக்கட்டிடத்தில் இருக்கிறார். அது முதற்கொண்டு நான் சொன்னேன், நான் அது முதற்கொண்டு, ஒரு பிரசங்கி என்பதைக் குறித்து அருமையான விதமாக அமைதியாக இருந்து விட்டேன். அதைக் குறித்து நான் அதிகமாகப் பேசவேயில்லை. என்னுடைய பழைய, மெதுவாக (பேசும் விதம், அந்த வேகத்தில் அதைக் குறித்து நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் எப்படியும், கர்த்தருடைய தூதனானவர் அங்கே மேலே கிரீன்ஸ் மில் என்று அழைக்கப்பட்ட ஒரு இடத்தில் என்னைச் சந்தித்த நேரமாக அது இருந்தது, அது டன்னல் மில், அப்போது அவர் இவைகளைக் குறித்து என்னிடம் கூறியிருந்தார். அந்த ஊழியக்காரர் யாரென்றால் செயின் லூயிஸை சேர்ந்த திரு. டாகெர்ட்டி அவர்கள். 24. அவர் என்னை தம்முடைய சிறு பெண் பிள்ளையிடமாக, தமது வீட்டிற்கு என்னை அழைத்தார். அவர் சில காரியங்களைக் குறித்து கேள்விப்பட்டு... கொண்டவளாய் படுத்துக் கொண்டிருந்த அவருடைய சிறு பெண்பிள்ளையிடமாக என்னை அழைத்தார். அவளோடுள்ள காரியம் என்னவென்று சரியாக மருத்துவர்க ளுக்கே தெரியாதிருந்தது. ஒரு.... போன்று ஏதோவொன்றாக அவர்கள் அதை அழைத்தார்கள் என்று நினைக்கிறேன். அது ஒரு... போன்று இருக்கிறது. நீங்கள் முடக்கு வாதமாகவும், நடுக்கமாகவும் ஆகி வீடுவீர்கள், அது ஒரு செயின்ட் வைட்டஸ் டான்ஸ் ஆக இருந்தது. நீங்கள் அதை உச்சரிக்கிற சரியான விதம் அது தான் என்று நம்புகிறேன். அந்தச் சிறு பிள்ளைக்காக மருத்துவர்கள் தாங்கள் செய்யக் கூடிய எல்லாவற்றையும் செய்திருந்தார்கள், பட்டணம் முழுவதிலுமுள்ள பயபக்தியோடு ஜெபித்து, மற்றும் எல்லாவற்றையும் செய்து, அவர்கள் அந்தச் சிறு பிள்ளையை எண்ணையால் அபிஷேகம் செய்திருந்தார்கள். மேலும் இது, அவளுடைய தகப்பனார் தெய்வீக சுகமளித்தலில் ஒரு மகத்தான விசுவாசியாக இருந்தார். எனவே அவர் என்னை அழைத்தார். அந்நேரத்தில் செயின்ட் லூயிஸிற்கு (போக) அணியும்படியாக பொருத்தமான ஆடைகள் என்னிடம் இல்லாதிருந்தது. மேலும் என்னுடைய சபையார்..... என்னிடம் எந்தப் பணமும் இல்லாதிருந்தது, எனவே அவர்கள் 11 டாலர்களைச் சேகரித்து, அந்த இரவில் எனக்கு ஒரு ரயில் பெட்டியைப் (chair car) பெற்றுக் கொண்டார்கள், நான் லூயிவில் கென்டக்கியை விட்டுப் புறப்பட்டேன், சகோதரன் டாகெர்ட்டியைச் சந்திக்கும்படி, செயின்ட் லூயிஸிற்குப் போகும் படியாக நான் ஒரு ரயில் வண்டியில் இருந்தேன். அந்தச் சகோதரர்களில் ஒருவர் தம்முடைய மேல் கோட்டை நான் அணியும்படி அனுமதித்தார், என்னுடைய மற்ற சகோதரர்களில் ஒருவர் ஒரு சூட்டை எனக்காக கடனாக வாங்கினார். நான் செயின்ட் லூயிஸிற்குச் சென்றேன். ரயில் அடுத்த நாள் காலையில் நின்ற போது, சகோதரன் டாகெர்ட்டி அங்கே நின்று கொண்டிருந்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவர் களைப்புற்றவராய் காணப்பட்டார். அவர், "சகோதரன் பிரன்ஹாமே, நீர் கர்த்தரிடமிருந்து ஏதாகிலும் கேட்டீரா?” என்றார். நான், "இல்லை, சகோதரன் டாகெர்ட்டி. குழந்தை எப்படி இருக்கிறது?” என்றேன். அவர், "அவள் மிகவும் மோசமாக இருக்கிறாள்” என்றார். நான் அவருடைய வீட்டிற்குச் சென்றேன், அங்கே அவருடைய அன்பான மனைவியைச் சந்தித்தேன், அவளுடைய முகம் தொங்கிப்போய் காணப்பட்டது. அவள் அப்படியே தளர்ந்துபோய் காணப்பட்டாள். 25. அநேக வாரங்களாக, இந்தப் பரிதாபமான சிறு குழந்தை அங்கே படுத்துக் கிடந்தாள், சுருள்முடியை உடைய, அவ்வித இனிமையான சிறு பெண்பிள்ளை, அவள் எவ்வளவு மோசமாக இருக்க முடியுமோ அவ்வளவு மோசமாக இருந்து, அப்படியே சீற்றத்தோடு காணப்பட்டாள்... அவளுடைய உதடுகள், அங்கே அவள் தன்னுடைய நாவை கடித்திருந்தாள், எல்லாம் அப்படியே மனதை உருக வைக்கிறதாய் இருந்தது, அது அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டேயிருந்தது.... அதற்கு எந்த நன்மையும் செய்ய முடியாதிருந்தது. அவள் மரித்துக் கொண்டு இருந்தாள். பரிதாபமான சிறு பெண், சிறு கைகள் பரிதாபமாக தோற்றமளித்தது, இளம் பொன்னிறமான தலைமயிரும், சுருள் முடியும் கொண்ட சிறு அன்புக்குரியவள், ஏறக்குறைய என்னுடைய சிறு ரெபெக்காவைப் போன்று காணப்பட்டாள். நான் அந்தச் சிறு பெண்பிள்ளையை நோக்கிப் பார்த்து, "இரக்கம்" என்று நினைத்தேன். அங்கே வீடு முழுவதும் பரிசுத்த ஆவியால் நிறைந்த கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். ஜெபக்கூட்டங்கள் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருந்தன, எந்த பயனும் இல்லை . சரி. நாங்கள் வெளியே சென்று.... நாங்கள் அந்தக் குழந்தைக்காக ஜெபத்தைக் கொண்டிருந்தோம்: எந்த பயனுமில்லை. சபைக்குச் சென்றோம், அவருடைய சபையில் ஜெபத்தை ஏறெடுத்தோம். அங்கே அவருடைய தகப்பனாரோடு, நான் முழங்கால்படியிட்டு, நான், "தேவனே, அந்தச் சிறு குழந்தை சுகமடைய நீர் அனுமதிப்பீரென்றால், நான் வெளியே ஆராதனைகளுக்குள் தொடர்ந்து போவேன் என்று வாக்குக்கொடுக்கிறேன்” என்றேன். நான் அவ்வாறு செய்ய வேண்டுமென்று எப்போதுமே உணர்ந்தேன். 26. நான் மேலே வீட்டிற்குத் திரும்பிச் சென்றேன், அதிகளவு பயன் உண்டாக நான் காணவில்லை. மணிக்கணக்காக நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். நான் அந்த அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அது ஏழை குடும்பமாக இருந்தது, ஜனங்கள் அவர்களுக்கு உதவி செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னும் பின்னுமாகப் போய்க் கொண்டிருந்தனர். அந்தப் பரிதாபமான சிறு குழந்தை, அப்படியே மோசமாக இருந்தது, அது தொடர்ந்து அப்படியே இருந்தது.... அவர்.... அது ஒரு மிருகத்தைப் போன்று சத்தம் எழுப்பினது, அப்படியே ஊளை இட்டுக் கொண்டிருந்தது. அது.... என்ற அளவுக்கு அது அதிகமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தது. இன்னும் சத்தமே அதற்கு இல்லாத அளவுக்கு அது அலறிச் சத்தமிட்டுக் கொண்டிருந்தது, அது ஒரு மிருகத்தைப் போன்று அப்படியே போய்க் கொண்டு இருந்தது, அந்தச் சிறு பெண் பிள்ளை, வினோதமான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. நல்லது, நான் சற்று நேரம் அங்கே உட்கார்ந்து விட்டு, முன்பக்க அறைக்குள் சென்று, உட்கார்ந்து கொண்டேன். பிறகு நான் வெளியே தெருவில் சென்று, மேலும் கீழும் நடந்தவாறு தெருவில் ஜெபித்துக் கொண்டிந்தேன். அதிக தூரம் போக நான் விரும்பவில்லை. நான் ஒரு போதும் செயின்ட் லூயிஸில் இருந்ததில்லை, எனவே நான் தெருவில் தூரமாகப் போக விரும்பவில்லை, அந்த ஒரு தெருவில் தான் (சென்றேன்). எனவே நான் திரும்பி வந்தேன் அந்த வயதான தகப்பனார் அங்கே வெளியே என்னைச் சந்தித்தார், அந்தப் பிள்ளையின் தாத்தா, கர்த்தர் ஏதாகிலும் கூறினாரா?" என்று கேட்டார். நான், "இன்னுமாக எதுவும் கூறவில்லை ” என்றேன். 27. எனவே நான் திரும்பிச் சென்று, அந்த வீட்டில் உட்கார்ந்தேன்..... அங்கே சில ஸ்திரீகள் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். நான் தொடங்கின போது, ஒரு தரிசனம் உருவாவதைக் கண்டேன். இப்பொழுது, அது.... என்னவென்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. யாரோ ஒருவர் உள்ளே வந்த போது, அது என்னை விட்டுப்போய் விட்டது. நான் வெளியே சென்று, வெளியே போய், வெளியிலிருந்த ஊழியக்காரர்களின் காரில் உட்கார்ந்தேன். அங்கே வெளியே என்னுடைய தலையைத் தாழ்த்தினபடி உட்கார்ந்து, ஜெபித்துக் கொண்டிருந்தேன், அப்போது நான் என்னுடைய கண்களைத் திறந்து பார்த்த போது, ஏதோவொன்று, "ஊஊஊ' என்பது போன்று சுற்றிலும் போய்க் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அது அந்த ஒளியாக இருந்தது. இன்றிரவு அந்தப் புகைப்படங்களில் ஒன்றை சகோதரன் டாகெர்ட்டி அவர்கள் பெற்றுக் கொள்வதில் நிச்சயம் உடையவனாய் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர் ஒரு போதும் ஒன்றைக் கண்டதில்லை. அதுதான் அவருடைய மகளை சுகப்படுத்தினது. இப்படியாக அங்கே இது சுற்றிலும் அசைந்து கொண்டிருந்தது. நான் கவனித்தேன், அது எனக்கு முன்பாக வெடித்தது, சரியாக என்ன நடந்தது என்பதையும், அந்தப் பிள்ளைக்கு என்ன தவறு நேர்ந்துள்ளது என்பதையும் வெளியே அந்தக் காரின் வாகன முகடிலேயே கண்டேன். நான் உள்ளே திரும்பி போக தொடங்கினேன், தாத்தா டாகெர்ட்டி கதவினருகில் நின்று கொண்டிருந்தார். நான், "சகோதரன் டாகெர்ட்டி, இப்பொழுது, என் மேல் உமக்கு நம்பிக்கை உண்டா ?” என்றேன். இப்பொழுது, அவரும் அவருடைய மனைவியும் தற்போது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நான், "நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீர் நம்புகிறீரா?” என்று கேட்டேன். அவர், "ஆம், சகோதரன் பிரன்ஹாமே” என்றார். 28. நான், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் கொண்டு உள்ளேன்” என்றேன். ஓ, என்னே. உங்களுக்குத் தெரியும், நான் ஒரு போதும், உணருகிற, அது.... சகோதரன் டாகெர்ட்டி அவர்களே, அது எத்தனை தடவைகள் உலகத்தைச் சுற்றிலும் இருந்திருக்கிறது. இருந்த போதிலும், அப்போழுது நான் அதை எப்படியாக குறைவாகவே அறிந்திருந்தேன். அப்போது நான், "இப்பொழுது, சகோதரி டாகெர்ட்டி அவர்களே, நான் என்ன கூறுகிறேனோ அதை அப்படியே சரியாகச் செய்யுங்கள்" என்றேன். அவளும், "சரி” என்றாள். நான், "எல்லாரும் வீட்டிற்கு வெளியே போக வேண்டுமென்று நான் விரும்புகிறேன், வெறுமனே குடும்பத்தார். சமையலறைக்குச் சென்று ஒரு சிறிய கிரானைட் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் தெளிந்த தண்ணீரையும் ஒரு சிறிய வெள்ளைத் துணியையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன். அவளும் அவ்வாறு எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். நான், "எனக்கு ஒரு பக்கத்தில் தாத்தாவாகிய டாகெர்ட்டியும், மறுபக்கத்தில் பிள்ளையின் தகப்பனாரும் முழங்கால்படியிட நான் விரும்புகிறேன். இப்பொழுது, நான்: பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே மாதிரி ஜெபத்தை திரும்பத் திரும்பச் சொல்லுகையில், தாய் அந்தத் துணியை அடித்து, அதைக் கசக்கிப் பிழிந்து.... ல் அடித்து, அதைக்கொண்டு முகத்தைக் கழுவ வேண்டுமென்று விரும்புகிறேன், பிறகு நான் முடிக்கையில், அதனுடைய கரங்களையும், அதன் பிறகு அதனுடைய கால்களையும் அவ்வாறு செய்ய விரும்புகிறேன்" என்றேன். நான் அதை முடிக்கையில், கர்த்தருடைய வார்த்தை வந்தது, கர்த்தர் உரைக்கிறதாவது, குழந்தை சுகமாகி விடும்." சரியாக என்ன சம்பவித்ததோ அதைக் கூறுகிறேன், அங்கே ஒரு எலும்பானது திரும்ப அதனுடைய முதுகில் பொருந்த வேண்டியிருந்தது, அங்கே நிலவறையின் கதவில் துள்ளிக் குதித்து, அந்த எலும்பை இடத்தை விட்டு வெளியே தட்டியது. நீ எங்கேயிருக்கிறாய், பெற்றி? நீ.... என்று எனக்குத் தெரியும். ஜனங்களுக்கு ஒரு சாட்சியாக நீ எழுந்து நிற்பாயா இன்றிரவு அதோ அந்தச் சிறு பெண்பிள்ளை. அது ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்தது. சகோதரன் டாகெர்ட்டி அவர்களே, அது உண்மை தானா? நீங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அது தான் தகப்பனும் தாயும், அவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், தாயும் சரியாக அந்த நண்பரும் சரியாக கடைசியில் இருக்கிறார்கள். இப்பொழுது, உங்களுக்கு நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 29. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், செய்யப்பட வேண்டிய ஏதோவொன்று அங்கேயிருந்தது. இப்பொழுது, இங்கிருந்து போவதற்கு முன்பு, வெறுமனே இன்னுமொரு சிறு சாட்சி. கென்டக்கியின் அதே பகுதியில் கீழே, ஒரு மெதோடிஸ்டு பிரசங்கியாரும் நானும் வந்தோம், நான் ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாக இருந்தேன். அந்த மனிதர் சகோதரன் ஜான்சனாக இருந்தார். சகோதரன் பீலர் அவர்களே, உங்களுக்கு அவரைத் தெரியும், நியூ ஆல்பெனியைச் சேர்ந்தவர். எனவே, அவருக்கு ஒரு மெதோடிஸ்டு சபை இருந்தது, மேலும் அவர்கள்... நாங்கள் வழக்கமாக..... ஐக் குறித்து ஒருவர் மற்றவரை நையாண்டி செய்வதுண்டு. அவர், "நீங்கள் பில்லியுடைய (சபைக்குப்) போவீர்களானால், அவர் உங்களை ஒரு பாப்டிஸ்டாக இருக்கும்படி முழுக்குவார் மற்றும் அதைப் போன்ற காரியங்களைச் செய்வார் என்று கூறுவார், உங்களுக்குத் தெரியும், அப்படியே அதைப் போன்று. ஆனால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். இந்தச் சிறு சாட்சிக்கு நமக்கு நேரமுண்டு என நினைக்கிறேன், அதன் பிறகு நான் துரிதப்படுவேன். இப்பொழுது, நீங்கள் உங்களுடைய சிதறாத கவனத்தை எனக்குக் கொடுங்கள், துரிதமாக. மேலும் அவர், பில்லி, நீர் வந்து, எனக்காக ஒரு இரவு பிரசங்கம் பண்ணுவீரானால், நான் வியாதிப்பட்ட ஜனங்களுக்காக உம்மை ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்ள மாட்டேன்” என்றார். 30. நான் வீட்டிற்குப் போன போது, எனக்கு விருப்பமில்லை... உங்களுக்கு சிந்தைக்கு அது என்னவொரு - என்னவொரு இழுப்பாக இருக்கும் என்று நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள். நீங்கள் கவனித்து, இந்த ஒலிநாடாக்களை மறுபடியும் போட்டுக் கேட்டு, தேவனுடைய கிருபையின் மூலமாக, அது என்ன கூறினது என்பதையும், நான் செய்வதையும் (கொண்டு) உங்களுடைய காரணத்தைக் கண்டுபிடியுங்கள், அது என்ன கூறுகிறதோ அதற்குப் பின்னால் நான் நிற்பேன். இப்பொழுது, அது என்னவாக இருந்தாலும் காரியமில்லை, அதற்கு எவ்வளவு காலம் ஆனாலும், அது காரியமில்லை .... இங்கே சமீபத்தில், வந்த ஒரு சாட்சியை நான் கொண்டிருந்தேன், அங்கே இரண்டு பெண்மணிகள் இருந்தார்கள். அவர்கள் கூட்டத்தில் இருந்திருந்தார்கள், அவர்களில் ஒருத்தி வந்தாள், அவளுக்குப் பயங்கரமான வயிற்றுக்கோளாறு (stomach trouble) இருந்தது. அவளுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. கர்த்தருடைய தூதனானவர் வந்து அவள் என்ன செய்திருந்தாள் என்றும், எல்லாவற்றையும் அவளிடம் கூறினார். அவள் அதைச் சரிசெய்ய தயாராக இருந்தாள், அப்போது அது, கர்த்தர் உரைக்கிறதாவது, வீட்டிற்குச் சென்று, என்ன வேண்டுமோ சாப்பிடு, நீ சுகமடையப் போகிறாய்” என்று கூறினது. அவள் வீட்டிற்குச் சென்றாள், தன்னுடைய தொண்டையில் ஒரு பெரிய கட்டியைக் கொண்டிருந்த ஒருவளுக்கு அந்தச் சீமாட்டி ஒரு அண்டை வீட்டுக்காரியாக இருந்தாள். உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்தலைச் செய்ய வேண்டிய சிலவற்றை அவள் கொண்டிருந்தாள். அவளும் சுகமடைவாள் என்று கர்த்தருடைய நாமத்தில் உரைக்கப்பட்டது. 31. நல்லது, வயிற்றுக்கோளாறை உடைய அந்தப் பெண்மணி வீட்டிற்குச் சென்றாள். அவள், "நல்லது, நான் என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்" என்றாள். பாவம் என்பது என்ன, நண்பனே? பாவம்... புகைப்பிடித்தல் பாவமல்ல. விஸ்கி மது இருந்துவது பாவமல்ல. விபச்சாரம் செய்வது பாவம் அல்ல. அது பாவத்தின் தன்மைகள் ஆகும். "விசுவாசியாதவனோ ஏற்கனவே ஆக்கினைத்தீர்ப்புள்ளாகி விட்டான்." அவிசுவாசம் தான் பாவமாகும். அது சரிதானா? நீங்கள் விசுவாசியாமல் இருக்கிற காரணத்தினால் தான் அந்தக் காரியங்களைச் செய்கிறீர்கள். இயேசு, "என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு" என்று கூறினார். பாருங்கள்? அந்தக் காரியம் உங்கள் விசுவாசமாக இருக்கிறது. நீங்கள் தேவனை விசுவாசிப்பீர்களானால், அந்தக் காரியங்களைச் செய்ய மாட்டீர்கள். புரிகிறதா? அது வெறுமனே பாவத்தின் தன்மைகளாக இருக்கின்றன. நீங்கள் தேவனை விசுவாசியாத காரணத்தினால் புகைப் பிடிக்கிறீர்கள். தேவனிடத்தில் உங்களுக்கு விசுவாசம் இல்லாத காரணத்தினால் நீங்கள் விஸ்கி மதுபானம் குடிக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிப்பதாகக் கூறலாம், ஆனால் உங்களுடைய சாட்சி, உங்களுடைய கிரியைகள், உங்கள் சாட்சிக்காக மிக உரத்த சத்தமாகப் பேசுகின்றன. நீங்கள் அவர்களுடைய எவைகளினால் அவர்களை அறிந்து கொள்வீர்கள்? அவர்களுடைய சாட்சியின் மூலமாகவா? அவர்களுடைய கனிகளின் மூலமாக, நீங்கள் அவர்களை அறிந்து கொள்வீர்கள் (அது சரியே.), அவர்களுடைய கனிகளினாலே. நீங்கள் ஒரு அவிசுவாசியாக இருக்கிற காரணத்தினால் தான் இவைகளைச் செய்கிறீர்கள். 32. சரி. அதன் பிறகு, இந்தப் பெண், அவள் வீட்டிற்குச் சென்று, புசிக்கத் தொடங்கின போது, அது அவளைக் கொல்வது போன்று இருந்தது. ஓ, அவள் மிகவும் வியாதிப்பட்டிருந்தாள். அவள் வாந்தி பண்ணினாள். நாட்கள் கடந்தன, வாரங்கள் கடந்து சென்றன. ஏறக்குறைய ஆறு வாரங்கள் கடந்தன. இப்பொழுது, அவளுடைய சாட்சி எனக்குக் கிடைத்தது. அவள் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருத்தியாக இருக்கிறாள், ஆனால் நான் வெறுமனே ஒரு திருஷ்டாந்தத்திற்காக இதைக் கூறிக் கொண்டிருக்கிறேன். அவள் இல்லினாயிஸில் வசித்தாள். அவள் வேறொரு கூட்டத்திற்கு வந்து, சாட்சி கூறினாள். அவள், "ஒரு நாள் காலையில்...” ஓ, அந்த வயிறு, வயிற்றுப் புண்களானது அவளுக்கு வலியை உண்டாக்கி, அவள் மிகவும் மோசமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் ஜன்னல் பக்கத்தில் நின்று, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள், அப்போது அவள் மிகவும் வியாதிப்பட்டிருந்தாகக் கூறினாள். அவள் கொஞ்சமாக சிறிது சிறிதாக காப்பியை அருந்த முயற்சித்தாள். அது அவளை மிகவும் வியாதிக்குள்ளாக்கியது. அவள், "பிறகு, மிகவும் குளிர்ந்த ஒரு உணர்ச்சி அவள் மேல் சென்றதாகக் கூறினாள். எனவே அவள் திரும்பிச் சென்றாள், அவள், "நான் -நான்” என்றாள். அவளுக்கு மிகவும் பசியெடுத்தது. அந்தப் பிள்ளைகளில் ஒன்று மீதியாக விட்டிருந்த ஒரு சிறு வாட்டப்பட்ட ரொட்டித் துண்டை அவள் அப்படியே எடுத்தாள், அந்தப் பிள்ளைகள் பள்ளிக்குப் போயிருந்தார்கள், அவள் அந்த வாட்டப்பட்ட ரொட்டியைப் புசிக்கத் தொடங்கினாள். அவள், "ஓ, வெண்ணை பூசிய அந்த வாட்டப்பட்ட ரொட்டி அவளை மிகவும் வியாதிக்கு உள்ளாக்கி விடும், ஆனால் அவளோ மிகவும் பசியாயிருந்தாள், அவளால் அதை நிறுத்த முடியவில்லை ” என்று கூறினாள். எனவே அவள் ஒரு சின்னஞ்சிறு அல்லது இரண்டு வாட்டப்பட்ட ரொட்டியைப் புசித்தாள்... எந்த மோசமான விளைவும் இல்லை, அவள் மீதியாயிருந்தவைகளையும் புசித்தாள். எனவே, அவள் கொஞ்சம் - கொண்டிருந்தாள், அவர்கள் கொஞ்சம் ஓட்ஸ்-களை மீதியாக விட்டிருந்தனர், எனவே அவள் பிள்ளைகளுடைய ஓட்ஸ்-களைப் புசித்துக் கொண்டிருந்தாள். வழக்கமாக அது அவளை மிகவும் வியாதிப்பட வைக்கும், ஆனால் அதுவோ அவளை வியாதிக்குள்ளாக்கவில்லை. எனவே அவள் தனக்கு ஒரு கப் காப்பியை ஊற்றி அதைக் குடித்து விட்டாள். எனவே அது சரியாகவே இருந்தது. எனவே அவள் அப்படியே அருமையாக உணர்ந்து கொண்டிருந்தாள். அவள், "நல்லது, எனக்கு இது புரியவில்லை " என்றாள். எனவே அவள் தனக்குக் கிழே நான்கு அல்லது ஐந்து வாசல்கள் (தள்ளி) இருந்த தன்னுடைய அண்டை வீட்டாரிடம் கூற தெருவில் போனாள். அவள் தன்னுடைய அண்டைவிட்டுக்கார பெண்ணிடம் கூற அவள் உள்ளே போன போது, அவளுடைய பக்கத்து விட்டுக்காரி தன்னுடைய உச்சக்குரலில் கத்திக் கொண்டு இருப்பதைக் கண்டு கொண்டாள், அந்தக் கட்டியானது அவளுடைய தொண்டையை விட்டுப் போயிருந்தது. 33. எனவே அது என்னவென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது. அது என்ன, அந்த மேடையில், கர்த்தருடைய தூதனானவர் அதை கூறியிருந்த போது, ஒவ்வொரு வினாடியும் அவர் உங்களிடம் இருக்க முடியாது. ஆனால் தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படியாக அவர் சுற்றுவட்டாரத்தினூடாக கடந்து சென்று, அதைச்சரியாக ஆக்கியிருந்தார். சில சமயம் நீங்கள் ஜெபிக்கலாம்.... தானியேல், ஒரு முறை அவன் வேண்டிக் கொண்ட போது, அந்தத் தூதன் அவனிடம் வர முடியாதிருந்தது என்று நம்புகிறேன், 21 நாட்களாக அவனிடம் வர முடியாதிருந்தது என்று நம்புகிறேன், இல்லையா? அது அங்கே வரக்கூடும் முன்பு இருபத்தொன்று நாட்கள் (ஆயிற்று). பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் விசுவாசத்தை இழந்து போனால், அவர்கள் வாய்ப்பை இழந்து போய் விட்டார்கள். ஆனால் செய்யும்படி தேவன் கூறுவதை நீங்கள் சரியாகச் செய்யுங்கள். இது அவருடைய வார்த்தையாக இருக்கிறது, இதுவே முதலாவது; மற்றவைகள் இரண்டாவதாக இருக்கிறது. 34. இப்பொழுது, அந்த இரவிலே இக்கூட்டத்தில், நான் கட்டிடத்தை விட்டு வெளியேறத் தொடங்கின போது, என்னைப் பின்புறம் வழியாக வெளியேற்ற வேண்டியிருந்தது. நான் கீழே இறங்கிச் சென்றேன், அவர், "நான் உம்மிடம் கூறுகிறேன்” என்றார், இந்த சங்கை அவர்கள், "நீர் வியாதிப்பட்ட எந்த ஜனங்களுக்கும் ஜெபிக்கும்படி நான் கேட்டுக் கொள்ள மாட்டேன். சகோதரன் பிரன்ஹாமே, இங்கே ஒரு சிறு பெண் என்னிடம் இருக்கிறாள்..." என்றார். இங்கேயுள்ள, இங்கே ஜெபர்சன்வில்லிலிருந்து வந்திருக்கும் சகோதரர்களாகிய உங்களில் அநேகருக்குத் தெரியும். லூயிவில்லிலுள்ள திறந்த வாசலின் சபையிலிருந்து வந்திருக்கும், டாக்டர். காபிள் அவர்களும் கூட அங்கே உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் காண நேர்ந்தது. இப்பொழுது தான் உம்மைக் கவனித்தேன். மேலும் திருமதி. காபிள் அவர்கள், நல்லது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் அங்கேயிருக்கும் உங்களைக் கவனிக்காமல் இருந்தேன். டாக்டர். பாஸ்வர்த் அவர்களே, அவர்கள் இங்கே இருந்தார்கள் என்று உமக்கு தெரிந்ததா? டாக்டர் அவர்களே, நான் கூறப்போகிற அந்த கேஸை உமக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். எனவே, டாக்டர் காபிள் அவர்கள், லூயிவில்லிலிருந்து வந்திருக்கிறார், லூயிவில் பட்டணத்தில் மிகப் பெரிய சபைகளில் ஒன்று இவருக்கு உண்டு. எனவே, அவர் மிகவும் அன்புள்ள, இனிமையான சகோதரன், நான் அதையும் கூட கூறியாக வேண்டும், ஏனென்றால் சகோதரன் காபிள் உண்மையாகவே அவ்வாறு இருக்கிறார். ஊழியக்காரர்களாகிய நீங்கள் அவருடைய கரத்தைக் குலுக்கி, அவரைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள். அவர் மிக அன்பான ஒரு நபராயிருக்கிறார், அவரும் அவருடைய மனைவியும் குடும்பமும் அவ்வாறே இருக்கின்றனர். மிக, மிக வியாதிப்பட்டிருந்த அவருடைய சிறு பெண் பிள்ளையிடம் ஒரு சமயம் பின் தொடர்ந்த ஒருவராக அவர் இருந்தார். 35. டாக்டர். காபிள் அவர்களை எனக்கு எப்படி தெரிய வந்தது, அவர் அவ்வளவு ஒரு மகத்தான நற்பெயரையும், பட்டணத்தைச் சுற்றிலும் எல்லாவற்றையும், மற்றும் அந்தஸ்துகளையும், அவருக்கிருந்த எல்லாவற்றையும் உடையவராயிருந்தார், நான்- எனக்கோ, என்னுடைய அற்பமான பழைய நாட்டுப்புறத்தானாய் இருந்தேன். அது அதைச் சுற்றிலும் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. எனவே ஒரு சமயம், அவருடைய நண்பர்களில் சிலர் வந்து, அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறினார்கள், லூயிவில்லிடிலுள்ள ஒரு கத்தோலிக்க மருத்துவ மனையில், அவருடைய தொண்டையிலிருந்து மரணத்திற்கேது வாக இரத்தம் வெளியே போய்க் கொண்டிருந்தது. நான் அங்கு சென்று, அவருக்காக ஜெபிக்கும்படி அவர்கள் விரும்பினார்கள். நான் அங்கே போனபோது, அந்த அறையில் நின்று கொண்டிருந்த அநேக மிஷனரிமார்களும் மற்றும் காரியங்களும் அந்த மனிதருக்கு இருந்தார்கள், அவர் அங்கே அந்த அறைக்குள் நின்று கொண்டிருந்த ஜனங்கள் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளச் செய்ய முயற்சித்து, மூச்சைப் பிடித்துபடி, அங்கே மேலே இருந்தார். நல்லது, அதைக் குறித்த ஒரு மனிதருக்கு முன்பாக நான் உள்ளே போக விரும்பவில்லை. நான் ஒரு கோக் பெட்டிக்கு (Coke box) பின்னால் முழங்கால்படியிட்டு, அவ்விதமாக அவருக்காக ஜெபிக்கத் துவங்கி, திரும்பிப் பார்த்து, வீட்டிற்குத் திரும்பிப் போய் விட்டேன். நான் வீட்டிற்குப் போனபோது, அவர்கள் மறுபடியும் அழைத்து, அறிய விரும்பினார்கள். நான், "நான் அங்கே கோக் பெட்டிக்குப் பின்னாலிருந்து அவருக்காக ஜெபித்து விட்டேன்” என்றேன். அவர்களோ, "ஏன், இங்கு வாருங்கள்” என்று கூறினார்கள். 36. நான் சகோதரன் காபிளிடமாக உள்ளே சென்றேன்; அவர் மரணத்திற்கேதுவாக இரத்தக்கசிய, அங்கே நின்று, சரியாக அங்கே உள்ளே படுக்கையிலேயே மரித்துக் கொண்டிருந்தார், வாழ அவருக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவரை சுகப்படுத்தும்படி நம்முடைய கர்த்தராகிய இயேசுவிடம் நான் கேட்டேன், அப்போது உடனடியாக இரத்தம் வருவது நின்று விட்டது, ஆனால் அது சரியாக அப்போதே இருந்தது, அவர் எப்பொழுதும் நலமாக இருந்து வருகிறார்... அது சரிதானா, சகோதரன் காபிள்? அது சரியே. அவர் தொடர்ச்சியாக, அங்கே அதற்குள் சென்று, ஜமெய்க்காவிற்குள்ளும், எங்கோ அதைப் போன்ற தேசங்களுக்கும் சென்றார். அவர் இயல்பாகவும் நலமாகவும் இருந்து வருகிறார். அவர் தமது சிறு மகளைக் கொண்டு வந்தார். அந்தச் சிறுமிக்கு என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்று என்னால் கூற முடியாது இருந்தது. அவர் எப்போதுமே விட்டில் என்னிடம் வருவார். அவர் தொடர்ந்து கூட்டங்களில் கலந்து கொண்டு வந்தார். அவருடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, அவர் மேலே வின்ட்சரிலும், ஒன்டாரியோவிலும், மற்றும் எல்லாவிடங்களிலும் இருந்தார். ஒரு நாள் சாட்டனூகா, டென்னஸியில் (இருந்தார்), நாங்கள் அப்பொழுது தான் உள்ளே போனோம், அபிஷேகம் இன்னும் என் மேல் இருந்தது. அவர் என்னுடைய கரத்தைக் குலுக்க விரும்பினார், அந்தச் சிறுமி நடந்து வந்து, உட்கார்ந்தாள், அப்போது அங்கே ஒரு தரிசனம் வந்து (broke forth), அது என்னவாக இருந்தது என்பதை அப்படியே சரியாகக் காண்பித்தது, சரியாக அந்த இடத்திலேயே அவள் சுகமாக்கப்பட்டாள். அது சரிதானா, சகோதரனே, சகோதரியே? அது சரியே. அவருடைய மகள்களில் ஒருத்தி, அவர்கள்... ஓ, என்னே. உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் அதனால் நிரம்பியுள்ளது. ஓ, அது தேவனுடைய நன்மையினால் முழுவதும் நிரம்பியுள்ளது. 37. அந்த இரவில், சகோதரன் ஜான்சன் அவர்களிடம் படிகளில் இறங்கிச் சென்றேன், நான் நினைத்தேன், அவர் என்னிடம் கூறின விதமாக, அவர் ஒரு -ஒரு ஞாயிறு பள்ளி... கொண்டிருந்தார். ஏன் இந்த - இந்த வரம் எதற்காக என்று நான் உங்களிடம் காண்பிக்க விரும்புகிறேன். அப்போது, கீழே இறங்கிக் கொண்டிருந்தேன், அந்த ஞாயிறு பள்ளி ஆசிரியைக் (குறித்து) அவர்கள் கூறினார்கள், அவர் என்னிடம் கூறின விதமாக, அவள் நிச்சயமாகவே உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருக்க (straitjacket) வேண்டும், அவள் பைத்தியமாகிப் போயிருந்தாள். நான் படிகளில் இறங்கிச் சென்றேன், அங்கே ஏறக்குறைய முப்பது வயதுள்ள அருமையான தோற்றம் கொண்ட ஒரு சிறு பெண் நின்று கொண்டிருந்தாள். அவள், "சகோதரன் பிரன்ஹாமே, எப்படியிருக்கிறீர்கள்” என்று கேட்டாள். நான், "நீ நோயாளியா?” என்று கேட்டேன். "ஆம், ஐயா" நான், "என்ன விஷயம்?” என்று கேட்டேன். அவள், "எனக்குத் தெரியவில்லை ” என்று கூறினாள். 38. நான் அவளுக்கா ஜெபித்துவிட்டு, தொடர்ந்து போய் விட்டேன். பிறகு, அதற்குப் பின் ஒரு சில நாட்களில், தெருவில், மனைவியும் நானும் அவளைச் சந்தித்தோம், அவளோடு கூட இரண்டு பெண்கள் இருந்தார்கள், மேலும் ஓ, அவள் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தாள். நாங்கள், அங்கே, "வெண்மையான வீடு” என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு இடத்திற்குள் ஏறிச் சென்று, நான் மீண்டும் அவளுக்காக ஜெபித்தேன். பிறகு, நான் கடல் கடந்து வெளிநாடுகளுக்குப் போனேன், அவளோ தொடர்ந்து என்னுடைய மனைவியை போனில் அழைத்துக்கொண்டேயிருந்தாள். அவள், "ஓ, அவர் எப்பொழுதாவது - ஒரு கர்த்தருடைய தூதனானவர் எப்பொழுதுதாவது அவரிடம் விஜயம் செய்வாரானால், என்னால் இந்தப் பட்டணத்தை விட்டு, இங்கிருந்து தூரமாக வெளியே வர முடியவில்லை " என்றாள். அவள் பயந்தாள்; அவள் மனநிலை பாதிக்கப்பட்டவளாக (mentally upset) இருந்தாள். அவள் ஏறக் குறைய எட்டு வருடங்களாக, லூயிவில்லிலுள்ள இந்தப் பிரபலமான மனநல மருத்துவரிடம் போய்க் கொண்டிருந்தாள், வாரத்திற்கு இருமுறை, பயணம் மேற்கொள்ளவே அவளுக்கு பத்து டாலர்கள் செலவானது. ஏன், அவளுடைய பரிதாபமான கணவன் அவளை பாதுகாத்தலால் உடைந்து போயிருந்தான். அது எந்த நலமானதையும் செய்யவில்லை, அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள். தேசத்தினூடாக வருகிற ஒவ்வொரு தெய்வீக சுகமளித்தலுக்கும் அவர்கள் போயிருந்தார்கள். அவர்கள் அங்கேயிருந்த எல்லாவற்றையும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் அந்தப் பெண்ணின் மேல் போதுமான எண்ணெயை ஊற்றி, ஒரு காலன் (எண்ணைய்) அவள் மேல் ஊற்றி அபிஷேத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் காலால் ஓங்கி மிதித்துப் (stomp) பார்த்தார்கள், அவர்கள் உதைத்தார்கள், பலமாகக் கத்தினார்கள், உரக்க கத்தியும், மற்ற எல்லாவற்றையும் செய்து பார்த்தார்கள்), .... பெற்றுக் கொள்ள முயற்சித்தார்கள். இப்பொழுது, நீங்கள் எவ்வளவு உதைக்கிறீர்கள் என்றோ, பலமாகக் கத்துகிறீர்கள் என்றோ பிசாசு கவலைப்பட மாட்டான். அவன் அப்படியே அங்கேயே உட்கார்ந்து கொள்வான். அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறிந்து இருக்கிறான், ஆனால் அவன் எவ்வளவு அதிகாரத்தைப் பெற்றி இருக்கிறான் என்பதை அறிந்திருக்கிறான். உண்மையான விசுவாசம் அங்கே நின்று கொண்டிருக்கும் போது, அவன் எதையும் பெற்றிருக்கவில்லை. அவன் பெற்றிருந்த எல்லாமே உரியப்பட்டு விட்டன. ஆனால் நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும். 39. எனவே, அவர்கள்.... அவள் எல்லாவிடங்களிலும் (போயிருந்தாள். அங்கே தேசத்தின் ஒவ்வொரு பாகங்களிலும் ஜனங்கள் வருடக்கணக்காக அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தனர். எனவே, ஒரு நாள் காலையில், அங்கே மேலே வீட்டில், விரிவாக அதற்குள் செல்ல எனக்கு நேரமில்லை, ஆனால் கர்த்தருடைய தூதனானவர் வீட்டிற்குள் வந்தார். என்னுடைய மனைவியும், அவர்கள் எல்லாரும், அவர்கள் அங்கே இருந்து, அதைக் கண்டார்கள். அவள், பில், நான் அந்தச் சிறு பெண்ணை கூப்பிடட்டுமா, நீங்கள் கூப்பிடுவீர்களா?” என்று கேட்டாள். அதற்கு நான், "ஏன், நிச்சயமாக. அவளைக் கூப்பிடு” என்றேன். மேலும் அது... நான் வெளியே சென்று விட்டேன். முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, லூயிவில்லிலிருந்து உள்ளே வந்திருந்த ஒரு மனிதர் அங்கேயிருந்தார், அவர் லூயிவில்லிலுள்ள ஒரு பாப்டிஸ்டு சபையிலிருந்து வந்திருந்தார். நான் அறைக்குள் இருக்கையில், தேவன் அவரைச் சுகமாக்கினார், அவர் இதோ சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அது சரிதானா, சகோதரனே? ஆம், ஐயா. லூயிவில்லிலுள்ள பாப்டிஸ்டு சபையிலிருந்து வந்திருக்கிற நீர்) அங்கே ஒரு சாட்சிக்காக எழுந்து நில்லுங்கள். 40. நான் அறையில் உட்கார்ந்திருந்தேன், நான் துரிதமாக போயாக வேண்டியிருந்தது. என்னுடைய மனைவி, "இப்பொழுது, இந்தச் சிறு பெண் பிள்ளையிடம், அல்லது இந்தச் சிறு பெண்ணிடம் வாருங்கள்” என்று கூறினாள். அவளுக்கு இரண்டு அல்லது மூன்று சிறு பிள்ளைகள் இருந்தார்கள். அவள் இருந்த இடத்திற்குள் நான் நடந்து சென்றேன், இந்த இரண்டு தடவைகளிலும், நான் அவளிடம் கண்ட ஒரே காரியம் என்னவென்றால், அவள் மெதோடிஸ்டு சபையை, நியூ ஆல்பெனியிலுள்ள பிரதான வீதி மெதோடிஸ்டு சபையைச் சேர்ந்தவள் என்பது தான். அவள் தன்னுடைய கரங்களை இவ்விதமாக பிடித்தபடி அங்கே உட்கார்ந்து கொண்டு இருந்தாள். நான், "என்ன விஷயம், சகோதரியே?” என்று கேட்டேன். அதற்கு அவள், "ஓ, எனக்குத் தெரியவில்லை , சகோதரன் பிரன்ஹாமே. எனக்கு அப்படியே பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்" என்றாள். நான், "நான் அவ்வாறு நினைக்கவில்லை. நீ ஒரு பைத்தியம் பிடித்த நபர் பேசுவது போன்று என்னிடம் பேசவில்லை” என்றேன். 41. எனவே அந்த நினைவை அவளை விட்டு என்னால் அகற்றிப் போட முடியும் வரையில், நான் வித்தியாசமாக நீட்டி, அவளுடைய மனதிலுள்ளதைப் பிடிக்க வேண்டியிருந்தது (நீங்கள் பாருங்கள்?). நான், 'நாம் ஒரு சிறு பயணம் செய்து, உலகம் துவங்குவதற்கு முன்பு திரும்பிப் போய், தூர நின்றபடி, தேவன் தம்முடைய முதலாவது நட்சத்திரத்தையும் மற்றவைகளையும் உண்டாக்கு வதற்கு முன்பு, உலமானது எவ்வாறு தோன்றுகிறது என்பதைக் கவனிப்போம்” என்றேன், அதைப்போன்று. ஒரு சில கண நேரத்தில், கர்த்தருடைய தூதனானவர் இந்த வாய்க்காலுக்குள் இழுப்பதை உணர்ந்தேன். அது அவ்வாறு செய்த போது, ஒரு சிறு கறுப்பு நிற கார் சரியாக என்னுடைய அறையின் குறுக்கே இவ்விதமாக ஓடிக்கொண்டிருந்ததை நான் கண்டேன். நான், உனக்கு எப்பொழுதாவது விபத்து நேர்ந்துண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவள், "இல்லை , ஐயா” என்றாள். 42. நான் பார்க்கிறேன்... இப்பொழுது, ஒரு மேடையின் மேல் அவளுக்காக ஜெபித்து விட்டு, அவளைப் போகும்படி விட்டு இருந்தேன். பாருங்கள்? ஆனால் நான் எனக்கு முன்பாக அவளை உடையவனாயிருந்தேன். நான் மீண்டும் ஒரு நிமிடம் கவனித்தேன். முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, இதோ அது வருகிறது. அப்போது தரிசனம் தோன்றுவதைக் கண்டேன், அது சரியாக நேராக உள்ளே வருகிறது. அது என்னைப் பிடித்துவிட்டது. அப்போது தப்பிக்கொள்ள எந்த வழியும் இல்லை. நான், நான் ஒரு சிறு காரைக் காண்கிறேன். நீ இளம் பொன் நிறமான தலைமுடியை உடைய ஒரு மனிதனின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். அப்போது ஒரு மோட்டார் வாகனம் வந்து கொண்டிருக்கிறது. நீ கடந்து போகிறீர்கள், அப்போது அங்கே ஒரு பெரிய வெளிச்சம் இருக்கிறது. அது ஒரு ரயில் வண்டி” என்றேன். பிறகு தரிசனம் போய்விட்டது. உடனே அவள் உரத்த சத்தமாக திடீரென்று பலமாகக் கத்திக்கொண்டே, வெளியே தரையில் குதித்து, மயக்கமுற்றாள். எனவே தரிசனம் தொடர்ந்து போய் விட்டது. இதோ அது இருந்தது. அவளுக்கு விவாகம் ஆனபோது, அவளுடைய கணவன் வெளிநாட்டுக்குப் போவதற்கு சற்று முன்பு, வெறுமனே ஒரு சில வாரங்கள் தான் ஆகியிருந்தது... அவள் ஒரு வாலிப பெண்ணாக இருந்தாள். இந்தக் கடைசி யுத்தம்.... அவன் வெளிநாட்டுக்குப் போயிருந்தான், அவளோ வெறுமனே ஒரு சிறு பெண்ணாக இருந்தாள், அப்போது அவள் அங்குமிங்கும் சுற்ற ஆரம்பித்தாள், அவள் தனிமையாக இருந்தாள், அப்போது அவள் வேறோரு மனிதனோடு சுற்ற ஆரம்பித்தாள். அப்போது அவள் அவனோடு கூட ஒரு இரவில் ஒரு சிறு காரில் வெளியே சென்று, அவளுடைய விவாக பொருத்தனைக்கு (marriage vow) உண்மையில்லாதபடி ஜீவித்தாள், அப்போது வீட்டிற்குப் போகும் சாலையில், ஏறக்குறைய ஒரு ரயில் வண்டியினாலே கொல்லப்பட்டிருப்பாள். அவள் என்ன செய்தாளோ அதைக் குறித்த எல்லாவற்றையும் அவளிடம் கூறினேன். அப்போது அவள் எழும்பி தரையில் (விழுந்து) தன்னுடைய உச்சக் குரலில் பலமாகக் கத்தத் தொடங்கினாள். மனைவி அங்கு உள்ளே வந்து, "ஏன், என்ன விஷயம்?” என்று கேட்டாள். 43. அவள், "ஓ, சகோதரன் பிரன்ஹாமே, அதை எவரிடமும் சொல்லி விடாதீர்கள்” என்றாள். நான், "நீ ஒரு கிறிஸ்தவள் என்று என்னிடம் கூறினதாக நினைத்தேன்” என்றேன். அவள், 'நான் கிறிஸ்தவள் தான், நான் அநேக வருடங்களுக்கு முன்பே அதை தேவனிடம் அறிக்கை செய்து விட்டேனே” என்று கூறினாள். நான், "நீ தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லை, உன்னுடைய கணவனுக்கு விரோதமாகத்தான், உன்னுடைய விவாக பொருத்தனைக்கு (marriage vow) விரோதமாகத்தான் நீ பாவம் செய்திருக்கிறாய். நீ விவாகம் பண்ணப்பட்ட ஒரு பெண்ணாயிற்றே. நீ எப்பொழுதாவது சுகமடைய விரும்புனால், உன்னுடைய கணவனிடம் போய் அதைச் சரிசெய்தாக வேண்டியிருக்கும்” என்றேன். அவள், என்னால் அதைச் செய்ய முடியாது. அது எங்கள் வீட்டை உடைத்து விடும். எனக்கு மூன்று சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள், என்னுடைய கணவரும் என்னை விட்டு விலகிச் சென்று விடுவார்” என்று கூறினாள். 44. நான், "இப்பொழுது, சீமாட்டியே, என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்து விட்டேன். உனக்குத் தெரியும், அதை உன்னை விட்டு வெளியே இழுத்துக் கொண்டுவரக்கூடிய ஒரு மனநல மருத்துவரும் இந்த உலகத்தில் கிடையாது. அது உன்னுடைய பின்னால் ஆத்துமாவின் கடைகோடியில் (gable end) இருக்கிறது, நீ அப்படியே.... நீ அந்த நிலையில் உன்னைத்தானே ஆக்கிக்கொள்ளும் மட்டுமாக, நீ ஆழ் மனதில் அதைக் குறித்து நினைக்கிறாய். முழு காரியமும் அது தான். இப்பொழுது, அங்கே தான் உண்மை இருக்கிறது. அது உண்மை என்று உனக்குத் தெரியும். உன்னையும், அந்த மனிதனையும், இப்பொழுது இதை அறிந்து கொள்ளும் என்னையும் தவிர, இந்த உலகத்தில் அதை அறியும் வேறு எந்த நபரும் இல்லை ” என்று கூறினேன். அவள், "அது சரியே” என்றாள். ஆனால் நான், என்னால் அதை சரி செய்ய முடியாது” என்றாள். நான், "நல்லது, இப்பொழுது, என்னால் செய்ய முடிந்தது எல்லாம் அவ்வளவு தான்” என்று கூறினேன். ஓ, நீர் போகப்போவதில்லை” என்று கூறினாள். நான், "ஆமாம், பெருமாட்டியே. இந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் அங்கேயிருக்கிறான், அது இங்கே இருக்கும் இந்த மனிதன். அவன் மிக கடுமையாக வியாதிப்பட்டு இருக்கிறான், இந்தக் காலையில் அவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறான். நான் உள்ளே போயாக வேண்டும். அங்கே இன்னும் கூடுதலாக சில ஜனங்களும் வந்து கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினேன். அதற்கு அவள், "ஓ, என்னால் முடியாது. என்ன கட்டாயமாக என்ன செய்ய வேண்டும்?” என்றாள். நான், "போய், உன்னுடைய புருஷனை அழைத்து, அதைச் சரி செய்து விடு. சரி செய். அந்தக் காரியத்தை சுத்தப்படுத்து. அதைச் செய்வதற்கு அந்த ஒரு வழி தான் உள்ளது” என்றேன். 45. அவள், "நல்லது, என்னால் அதைச் செய்ய முடியாது” என்றாள். மேலும் நான்..... அவள், ஓ, நான் அப்படியே.. நான் செத்துவிடுவேன். நான்.... என்று கூறிவிட்டு, அவ்விதமாகப் போகத் தொடங்கினாள். அப்போது நான் சுற்றுமுற்றும் பார்க்க நேர்ந்தது, அவளுடைய பக்கத்தில் ஏதோவொன்று உருவாவதைக் கண்டேன், நான் நோக்கிப் பார்த்த போது, அங்கே ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான், அவனுக்கு கறுத்த தலைமுடி இருந்தது, அவன் ஒருவிதத்தில் பக்கவாட்டில் தன்னுடைய தலையை வாரி இருந்தான், ஒருவித சுருள் முடி அவனுக்கு இருந்தது, அவளை விட சற்று வயதுள்ளவன். நான், "உன்னுடைய கணவன் கறுத்த தலைமுடி உடையவன் தானா?” என்று கேட்டேன். அவள், "ஆம், ஐயா” என்றாள். ஒரு விதத்தில் நெட்டையாக இருப்பானா?” என்றேன். ஆம், ஐயா.” நான், அவன் சபையில் ஒரு டீக்கன் இல்லையா?” என்றேன். அவள், ஆம், ஐயா” என்றேன். நான், அவன் ஒரு செவ்ரோலெட் நிறுவனத்திற்காக வேலை பார்க்கிறான், இல்லையா?” என்று கூறினேன். ஆம், ஐயா” நான், அவனும் உன்னிடம் அறிக்கை செய்யும்படி அதே காரியத்தை உடையவனாயிருக்கிறான்” என்றேன். சகோதரன் ஜான்சன் அவர்களால் ஒரு எழுப்புதலையும் கொண்டிருக்க முடியாததில் வியப்பொன்றுமில்லை. நான், "இதோ பார். உன்னுடைய கணவன், அவன் பிரான்ஸில் தரையிறங்கிய போது, அவன் ஒரு சிறு பெண்ணை எடுத்து,” அவன் என்ன செய்தான் என்று கூறினேன். நான், "அங்கே அந்த அலுவலகத்தில் ஒரு பெண் வேலை பார்க்கிறாளே, அவள் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்திருப்பாளே, அவர்கள் ஒரு பச்சைநிற செவ்ரோலெட் காரில் இருந்து, மூன்று நாளை விட கூடுதல் ஆகவில்லை . அவனும் அதே காரியத்தில் குற்றம் உள்ளவனாயிருக்கிறான்” என்றேன். "என்னுடைய கணவனாக இருக்காது” என்றாள். "நல்லது, நீங்கள் எல்லாரும் காரியங்களைச் சரிசெய்வது தான் நல்லது. நீ அவனை தொலைபேசியில் அழைப்பது நல்லது" என்று கூறினேன். 46. எனவே மேடா அவளிடம் பேசி, அதைச் செய்ய சம்மதிக்கப் பண்ண வேண்டியிருந்தது. அவள் போய் அவனுடைய புருஷனை அழைத்தாள், அவர்கள் காரில் ஏறி சாலையில் சந்தித்தார்கள். எனவே அவள் அவனுடைய காரில் ஏறி, அவள், இப்பொழுது, நான் உம்மிடம் கூற விரும்புகிறேன்...' என்றாள். அவள் அது எல்லாவற்றையும் அவனிடம் அறிக்கை பண்ணினாள். அவள் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான், இப்பொழுது, நீர் இதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு, இந்தப் பெண்ணோடு, அங்கேயுள்ள அந்த அலுவலக பெண்ணோடு வெளியே போகவில்லையா, நீங்கள் இந்த பச்சை நிற செவர்லட் காரில் இருக்கவில்லையா, அவள் ஒரு இளஞ்சிவப்பு நிற ஆடை உடுத்தியிருக்கவில்லையா..." என்று கூறினாள். அதற்கு அவன், "உனக்கு அது எப்படி தெரியும்? நீ எங்கே இருந்தாள்?” என்று கேட்டான். மேலும் எனவே, எங்கேயிருந்தது என்று அவள் அவனிடம் கூறினாள். அவர், "தேனே, அது உண்மை தான். அது உண்மை என்று ஒப்புக் கொள்கிறேன். நீ என்னை மன்னிப்பாயானால், நானும் உன்னை மன்னிப்பேன். நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்த்து, சரியாக வாழ்க்கையைத் தொடங்குவோம்” என்றான். 47. ஒருசில நிமிடங்களில், இதோ அவர்கள் திரும்பி, படிகளில் ஏறிவருகிறார்கள், அவர்களுடைய கன்னங்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. ஆஹா, அப்போதே சாத்தான் தன்னுடைய பிடியை விட்டுவிட்டான். பாருங்கள்? இப்பொழுது, அங்கே தான் அது இருக்கிறது. புரிகிறதா? இப்பொழுது, அது அதைத் தீர்த்து விட்டது. ஆனால் அந்தப் பாவமானது அங்கே கீழே இருக்கும் காலம் வரையில், நீங்கள் எவ்வளவு தான் உரத்த சத்தமாக பலமாகக் கத்தினாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் எவ்வளவு பலமாக தரையில் ஓங்கி மிதித்தாலும், நீங்கள் எவ்வளவு எண்ணைய் ஊற்றினாலும், நீங்கள் எவ்வளவு உரத்த சத்தமாக ஜெபித்தாலும், அல்லது எளிதாக ஜெபித்தாலும், அல்லது நீங்கள் என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டேயல்ல, அந்தப் பிசாசு சரியாக அங்கேயே தங்கியிருப்பான், ஏனென்றால் அறிக்கை செய்யப்படாத பாவம் உங்களிடம் இருக்கும் காலம் வரையில், அவனுக்கு சட்டப்பூர்வமான உரிமை உண்டு, அது சரியே. நீங்கள் மேடையின் மேல் கவனித்துப் பாருங்கள்... "நான் இந்தப் பிசாசைத் துரத்துகிறேன்” என்பதைக் குறித்து நீங்கள் ஏதோ ஓன்றை இங்கே என்னிடம் கூறுவது அரிதுதான். முதலில் அதைச் செய்ய தேவனுக்கு சித்தம் தானா என்று நான் அதை முதலில் பார்த்தாக வேண்டும். நான் அந்த நபருக்காக ஜெபிப்பேன், ஆனால் ஒருபோதும் அந்தப் பிசாசை வெளியே வரும்படி கேட்க மாட்டேன். 48. அம்மாதிரியான ஒரு வரம் உங்களை நரகத்திற்கு அனுப்பி விடும் என்று உணருகிறீர்களா. மோசே ஒரு தீர்க்கதரிசி என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அவன் தேவனுக்கு கீழப் படியாமல் போனான் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? நிச்சயமாக. தேவன், "போய், கன்மலையைப் பார்த்துப் பேசு” என்று கூறினார். இனிமேல் அதை அடிக்கக் கூடாது; அது ஏற்கனவே ஒருமுறை அடிக்கப்பட்டுள்ளது. அது கிறிஸ்துவே. அது சரிதானா? மோசேயோ ஒரு தீர்க்கதரிசியாக இருந்து, தேவனுக்கு முன்பாக வல்லமையை உடையவனாயிருந்தான். அவனோ அங்கே கீழே சென்று, தேவன் எதைச் செய்யக் கூடாது என்று அவனிடம் கூறினாரோ அதற்கு மாறாகவே அதைச் செய்தான். அவன் கன்மலையை அடித்தான்; அது அதிலுள்ள தண்ணீரைக் கொண்டு வரவில்லை, அவன் மறுபடியும் அதை அடித்து, "கலக்காரர்களே, நாங்கள் கட்டாயம் இந்தக் கன்மலையிலிருந்து உங்களுக்குத் தண்ணீரைப் வரபண்ணுவோமோ" என்று சொல்லி, அவன் தேவனுடைய சித்தத்திற்கு மாறாக இருந்ததைச் செய்தான், ஏனென்றால் தேவன் அவரை ஒரு தீர்க்கத்தரிசியாக இருக்கும்படி நிர்ணயித்திருந்தார் (allotted), அது தேவனுடைய சித்தமாக இருந்தாலும், தேவனுடைய சித்தமாக இல்லை என்றாலும், கன்மலையிலிருந்து தண்ணீரைக் கொண்டு வரும் வல்லமை அவனுக்கு இருந்தது. அது சரிதானா? அவன் அதைச் செய்தான், இல்லையா? அது தேவனுடைய சித்தமாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைச் செய்யக் கூடாது என்று தேவன் அவனிடம் கூறினார், ஆனால் எப்படியும் அவன் அதைச் செய்தான். ஆனால் அதன் பிறகு, தேவன் மோசேயோடு இடைப்பட்டார். அது சரி தானா? அவன் வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்திற்குள் போக அவர் அனுமதிக்கவில்லை . எலியாவைக் குறித்து எப்படி, வழுக்கைத் தலையாக போயிருந்த அந்த வாலிபன், அவன் ஒரு வாலிபனாக இருந்தபோது, சிறு பிள்ளைகள் அவனைக் கிண்டல் செய்யத் தொடங்கி, வழுக்கைத் தலை கிழவா, வழுக்கைத் தலை கிழவா என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். ஏன், என்னே. ஆனால் அது அந்தத் தீர்க்கதரிசியை கோபமடையச் செய்தது. அவன் திரும்பிப் பார்த்து, அந்தப் பிள்ளைகளை சபித்தான். அப்போது இரண்டு பெண் கரடிகள் 42 அப்பாவி சிறு பிள்ளைகளைக் கொன்று போட்டது. அது சரிதானா? அது, அந்தப் பரிதாபமான சிறு பிள்ளைகளைக் கொன்று போடுவது, பரிசுத்தாவியின் சுபாவம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் அது கோபம் கொண்ட ஒரு தீர்க்கதரிசியாக இருந்தது. கவனமாக இருங்கள். 49. இப்பொழுது, நான் என்ன கூற வருகிறேன் என் புரிகிறதா? அந்த காரணத்தினால் தான் எளிதாகச் சென்று, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை கவனித்துப் பார்க்கிறேன். ஒரு முறை தேவன் யாரோ ஒருவர் மேல் ஏதோவொன்றை வைக்கலாம், தேவன் அதை அங்கே வைக்காவிட்டால், அதைச் செய்ய, அந்த நபரின் மேல் சாபத்தை வைக்க, அவர் சாத்தானுக்கு அனுமதி கொடுத்திருப்பார், ஏனென்றால் ஏதோவொன்றை அவர் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்க, இதோ நான் சுற்றிலும் வந்து, அதை அவர்களை விட்டு எடுத்துப் போடுதல், அப்போது அது எந்த விதமான ஒரு நிலையில் இருக்கும் என்று பார்க்கிறீர்களா, தேவன் என்ன செய்திருப்பார்? எனவே ஆகையால் தான் நான் எளிதாக சென்று, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைக் கவனிக்கிறேன். நான் தேவனுடைய சித்தத்தைக் கண்டு பிடித்தால், அப்போது நான் என்னுடைய காலை எங்கே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிகிறேன். ஆனால் தேவனுடைய சித்தத்தை நான் அறிந்து கொள்வது மட்டுமாக, நான்.... இப்பொழுது, நான் தேவனுடைய சித்தத்தை அறியாத ஜனங்களை கண்டனம் செய்வதில்லை. அது... அவர்களுக்கு அது தெரியா விட்டால், தேவன் பதில் சொல்லும்படியான பொறுப்பு உள்ளவர்களாக அவர்களை நியாயந் தீர்க்க மாட்டார். அது முற்றிலும் சரியே. அவர்கள் என்ன கூடுமோ அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த காரணத்தினால் தான் நான் மிகவும் நிதானமாக சென்று, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைக் கவனிக்கிறேன். இப்பொழுது, உங்களுக்குப் புரிகிறதா? ஆகையால் தான் நான் ஜெபிப்பதைக் காட்டிலும் அதற்கு மேலும் அதிகமாக ஜெபம் பண்ணுவதில்லை. நான் ஏதோவொன்றைக் கண்டால், தேவன் என் செய்திருக்கிறார் என்பதைக் கண்டு, அறிக்கை செய்யப்பட்டு, எல்லாமே சுத்தமாக துடைக்கப் பட்டிருந்தால், அப்போது பிசாசு அந்த நபரை விட்டுப் போகும்படி கேட்கிறேன். நான் அதைக் காணாவிட்டால், அப்படியானால் நான் அதைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் ஒரு மேடையின் மேல் இருந்து, வேறொருவரிடம் வர முயற்சித்துக் கொண்டு இருப்பீர்களானால், ஏறக்குறைய ஒரு காரியத்தை, ஏதோ தவறாய் இருப்பதை நான் கண்டவுடனே, நான் அப்படியே, "அது சரிதானா?” என்று கேட்கிறேன். ஆமாம், அது சரிதான்.” "நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்வீர்களா?” "ஆமாம்." "நல்லது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பராக. போங்கள், கர்த்தர் தாமே உங்களைச் சுகமாக்குவாராக." 50. அந்த நோயாளிக்கு என்ன சம்பவிக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. அவர்கள் சுகமடைய முடியும் ஒரு நிலைக்கு அவர்களுடைய விசுவாசத்தை உயர்த்தவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா? இப்பொழுது, சரியாக இங்கே நின்று பேசிக் கெண்டிருக்கையில், சரியாக இப்பொழுது இங்கேயே, நான் இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கையில், நான் சரியாக இங்கே நின்று கொண்டு இருக்கையில், இங்கே சரியாக மேடையின் மேல் நின்று கொண்டு இருக்கையில், இங்கேயிருக்கும் ஒரு நபர் சுகமடைந்ததை நான் கண்டேன். நான் ஒரு சாட்சியைக் கூறிக் கொண்டிருந்த போது, ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, இங்கே மேடையில் சுகமாக்கப்பட்டார் (அது சரியே), ஒரு நபர் சுகமாக்கப்பட்டார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக. நாளை இரவு, கர்த்தருக்குச் சித்தமானால், நாம் வேறொரு பெரிய இடத்திற்குள் போகும்போது, நாம் அங்கே வந்து, ஏறக்குறைய பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் பிரசங்கம் பண்ணி, முழு கூட்ட ஜனங்களுக்காகவும் நம்மால் ஜெபிக்க முடியுமா என்று பார்க்கப் போகிறோம். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? உங்களுக்கு அது விருப்பமானால், "ஆமென்” என்று கூறுங்கள். [சபையார், ஆமென்” என்று கூறுகிறார்கள். - ஆசரியர்.) அப்படியே அப்படியே மேலே வந்து அவர்களுக்காக ஜெபிப்பது, நோயாளியை தேடிக் கண்டு பிடிக்க அல்ல, தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய ஏதோவொன்றை நான் அடையும்படிக்கு ஆகாதவாறு. எனவே அப்படியானால், அவர் தேடிக் கொண்டிருக்கட்டும். 51. இப்பொழுது, உங்களுக்குப் புரிகிறதா? யாரோ ஒருவர், இவ்விதமாக, "சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய நேரத்தை மிக சுலபமாக எடுத்துக்கொள்ளும்படி செய்வது எது?” என்று கூறினால் நீங்கள் எப்போதுமே புரிந்து கொள்வீர்களா? ஒரு தரிசனம், உங்களால் எவ்வளவு கடினமாக பிரசங்கம் பண்ண முடியுமோ அவ்வளவு கடினமாக இரண்டு மணி நேரங்கள் பிரசங்கம் பண்ணுவதைக் காட்டிலும், ஒரு தரிசனத்தைக் காண்பது அதிகமாகக் கொண்டு வந்து விடும் - அதிக பலத்தை வெளியே எடுத்து விடும்..... தானியேல் ஒரு தரிசனத்தைக் கண்டு, அநேக நாட்களாக தன்னுடைய தலையில் தொந்தரவைக் கொண்டு இருந்தான். அது சரிதானா? இப்பொழுது, இங்கு உள்ளே, முழு காட்சியையும் நான் காண்பதில்லை. அது போன்று இருக்கிறது, நான் எப்போதுமே, "பீப்..” என்று கூறினது போன்று. சிறு பையன்களாகிய உங்களில் எத்தனை பேர் எப்பொழுதாவது சுற்றிலும் பலகையால் ஆன வேலியின் மேல் நழுவிச்சென்று, ஒரு முடிச்சு இருக்கும் ஒரு துண்டு மரத்திலுள்ள ஒரு துவாரத்தினூடாகவோ (knothole), அல்லது ஏதோ ஓன்றினூடாகவோ பந்து விளையாட்டு விளையாடுவதை பார்த்து இருக்கிறீர்கள்? நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா: அருகிலே கடந்து செல்லும் ஒரு திருவிழாவைப் பார்த்து இருக்கிறீர்கள்? பாருங்கள்? நீங்கள் உங்கள் கால்விரல்களில் நின்றபடி, உற்றுப் பார்த்து, "நான் -நான்-நான்-நான்நான் ஒரு யானையைக் கண்டேன்" என்று கூறுகிறீர்கள். பாருங்கள்? பிறகு நீங்கள் மறுபடியுமாக திரும்பவும் கீழே இறங்கி விடுகிறீர்கள். பிறகு மீண்டும் மேலே நோக்கிப் பார்க்கிறீர்கள். "நான்-நான் -நான் ஒரு ஒட்டகச்சிவிங்கி போவதைக் கண்டேன்.” நல்லது, பாருங்கள், நீங்கள் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தரிசனங்கள் அந்தவிதமாகத்தான் இருக்கிறது, ஒரு விதத்தில் இங்கே அதே விதமாகத்தான் உங்களுக்குக்கொடுக்கப்படுகிறது. பாருங்கள்? நான் கடும் முயற்சி செய்து, சுற்றிலும் எல்லா இடங்களிலும் ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருப்பதைக் கவனிக்கிறேன், தரிசனம் என்னவாக இருக்கிறது என்பதை காண நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், நான் இங்கே பார்க்கிறேன், எனக்கு முன்பாக ஒரு மருத்துவமனை திறக்கப்படுகிறது, ஒரு ஸ்திரீக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும் அந்த பித்தப்பை.... உனக்குப் பித்தப்பை கோளாறு இருந்திருக்கவில்லையா? உனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கவில்லையா?” "ஆமாம்." "தேவன் உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்.” புரிகிறதா? 52. நான் அப்படியே.... ஆனால் இப்பொழுது, அது, நான் அந்த வரத்தைத் தானே முன் தள்ளிக் கொண்டிருக்கும் போது தான் இருக்கிறது. ஆனால் பிறகு, நான் அப்படியே நிற்கும் போது, முற்றிலுமாக அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது, தேவன் ஒருவிதத்தில் இறங்கி வந்து, என்னுடைய கழுத்துப்பட்டையின் பின்புறத்தைப் பிடித்து அந்த வேலியின் மேல் என்னைத் தூக்கி விட்டு, அது இங்கே பின்னால் எங்கு துவங்கினது என்று நீ பார்க்கிறாயா? இங்கே நெடுகிலும் இருக்கிற அவர்களைக் குறித்த எல்லவற்றையும் பார்க்கிறாயா? இங்கே என்ன இருக்கப் போகிறது என்று காண்கிறாயா?" என்று கூறுகிறார். அது தேவன் அதைச் செய்கிற போதுதான். புரிகிறதா? அது அவருடைய சொந்த சித்தத்தில் அதைச் செய்கிற போது தான். நான் ஒருவிதத்தில் இவ்விதமாக அதற்கு நெருக்கித் தள்ளும்போது தான், ஏனென்றால் அது ஒரு தெய்வீக வரமாக இருக்கிறது, ஆகையால் தான் நான் எளிதாகப் போகிறேன், ஏனென்றால் நான் என்னைத்தானே அதற்கு நெருக்கித் தள்ளுகிறேன். உங்களுக்கு விளங்குகிறதா? உங்களுக்கு புரிகிறது என்றால், உங்கள் கரங்களை மேலே உயர்த்தி, எனக்குப் புரிகிறது, சகோதரன் பிரன்ஹாமே. நான் -நான் உம்மை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். சரி. உங்களுக்கு நன்றி. இப்பொழுது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பராக. இன்றிரவு என்னால் முடிந்த எல்லாருக்காகவும் நான் ஜெபிக்கப் போகிறேன். இவ்வளவு தாமதமாக உங்களைப் வைத்திருப்பதற்காக நான் வருந்துகிறேன். என்னுடைய... கென்டக்கியில் நடந்த என்னுடைய முதலாவது கூட்டங்களில் ஒன்று, மேலும் நீங்கள்... இருக்க வேண்டுமென்று நான்-நான் விரும்புகிறேன். நான் இங்கே இருக்கையில், கர்த்தருக்காக என்னால் கூடுமான எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன். இது ஒரு விதத்தில் சுற்றிலுமுள்ள மற்ற ஜனங்களிடத்தில் இரகசியங்களைப் பரப்புவதாக (noised abroad) இருந்து வருகிறது, கர்த்தருக்குச் சித்தமானால், ஒருக்கால் அடுத்த வாரம், அங்கே ஆற்றின் மறுபக்கத்திலுள்ள ஈவான்ஸ்வில்லில் இருப்போம். இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 53. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) இதைப் பின்னால் நகர்த்தப் போகிறேன். எல்லாரும் மிகவும் பயபக்தியாக இருக்க விரும்புகிறேன். இப்பொழுது, நான்... பழமை நாகரீகமான மார்க்கத்தில் எனக்கு எவ்வளவு நம்பிக்கை உண்டு என்று உங்களுக்குத் தெரியும். கர்த்தரைத் துதிப்பதிலும் தேவனிடம் துதிகளைச் சத்தமிடுவதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் இப்பொழுது, நாம் இவ்விதமாக நின்று கொண்டிருக்கையில், அது என்ன செய்கிறது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் நகரும் போது புரிகிறதா?), அல்லது -அல்லது காரணம்.... அங்கே சுற்றிலும் விசுவாச வங்கி இருக்கிறது, பிசாசுகள் ஒன்று மற்றொன்றை இழுப்பதை நீங்கள் உணருவீர்கள். நீங்கள் பாருங்கள்? ஒரு குறிப்பிட்ட நபரிடத்தில் ஏதாவது தவறு இருக்குமானால், மேலும் அது.... கட்டிடத்திற்குள்ளிருக்கும் ஒரு குறிப்பிட்ட நபரைப் போன்று, அவர்களுக்கு ஏதோ தவறு இருக்கிறது, நல்லது அப்படியானால், இங்கேயிருக்கும் ஒரு நோயாளிக்கு ஏதோ தவறு இருந்து, அது இரக்க குணமுள்ள - பரிவிரக்கம் கொள்ளுகிற பிசாசாக (sympatheticsympathizing demon) இருக்கும் போது, அவைகள் ஒன்று மற்றொன்றை முன்னும் பின்னுமாக இழுக்கும். நீங்கள் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளும் போதும், அதே காரியம் தான் இருக்கும். நீங்கள் உங்களைச் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் விசுவாசத்தின் மதிலைப் பெற்றுக் கொள்வீர்களானால்..... இயேசு அவர்கள் எல்லாரையும் அந்தக் கட்டிடத்தை விட்டும், மற்றும் அதைப் போன்ற காரியங்களை விட்டும் வெளியே வைத்து, அதன் பிறகு நான் வியாதியஸ்தர் களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்... அது நினைவிருக்கிறதா? பாருங்கள், உண்மையாகவே விசுவாசித்தவர்களும், உண்மையிலேயே தேவனோடு கூட உயரத்தில் இருக்கிறவர்களும் தான் அதற்குத் தேவைப்பட்டனர். 54. இப்பொழுது, இந்த மனிதன் இங்கே நின்று கொண்டு இருக்கிறான், நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம் என்று நினைக்கிறேன், அப்படித்தானே? ஐயா, எனக்கு உம்மைத் தெரியாது. மேலும்... ஆனால் நாம் -நாம் முழுமையாகவும், முற்றிலுமாகவும் அந்நியர்களாயிருக்கிறோம். எனக்குத் தெரிந்தது எல்லாம், அவர் அப்படியே இங்கே மேடையின் மேல் நின்று கொண்டிருக்கிறார். அவர் மனிதராயிருக்கிறார். தேவன் அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்று நான்.. நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது, நான் கேட்க விரும்புகிறேன்: முதலாவதாக இங்கே இருக்கிறவர்கள் யாராவது உண்டா? பார்ப்போம், என்னுடைய கூட்டங்களில் நீங்கள் எப்பொழுதாவது இருப்பது இதுவே முதல் தடவையாயிருப்பவர்கள்? நல்லது, என்னே, சற்று அந்தக் கரங்களைப் பாருங்கள். அது -அது அதை மோசமாக ஆக்குகிறது. பாருங்கள், ஒவ்வொரு இரவும் அது .?... ஊடாகப் போகிறது. பாருங்கள்? இப்பொழுது, இயேசு இங்கே பூமியின் மேல் இருந்தபோது... நான் இதை உங்களிடம் கேட்கிறேன். இயேசு கிறிஸ்து இங்கே பூமியின் மேல் இருந்திருந்தால், இந்த மனிதரையோ, அல்லது வேறு யாரையும் அவ்வளவு அதிகமாக சுகமடைய, அவரால் அதைச் செய்ய முடிந்திருக்காது. அவர் ஏற்கனவே அதைச் செய்துவிட்டார். அது சரிதானா? ஆனால் நல்லது, அவர் இங்கே பூமியின் மேல் இருந்திருந்தால், அவர் ஒரு சுகமளிப்பவர் என்று உரிமை கோரியிருக்க மாட்டார், அப்படித் தானே? அவர் பெதஸ்தா குளத்தில், முடவர்கள் பக்கமாகவும், சப்பாணிகள், குருடர்கள், முடவர்கள், மற்றும் சூம்பின உறுப்புடைய (withered) பெரும் கூட்ட ஜனங்களைக் கடந்து சென்றபோது, அவர் அவர்கள் ஒவ்வொருவர் பக்கமாகவும் கடந்து சென்று விட்டார். அவர்..... என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு தேவனாக இருந்தார் என்றும், அவர் இம்மானுவேல் என்றும், தேவன் அவருக்குள் இருந்தார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து. உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. அவர் மகத்தான யோகோவா தேவனாக இருந்தார். இங்கே பூமியின் மேல் அபிஷேகம் பண்ணப்பட்டவராயிருந்தார்: தேவன் நம்மோடு. அவர் சரியாக அந்த முடவர்களினூடாகவும், அல்லற்படுகிறவர்களினூடாகவும் கடந்து சென்று விட்டார். ஜனங்களுக்காக முழுவதும் மனதுருக்கம் நிறைந்தவரும், அன்பினால் நிறைந்தவருமாகிய ஒரு மனிதர் சப்பாணிகள் பக்கமாகவும், முடவர்கள் பக்கமாகவும், குருடர்கள் பக்கமாகவும், சூம்பின உறுப்புடையவர்கள் பக்கமாகவும் கடந்து சென்றாலும், அவர் ஒரு போதும் அவர்களுக்கு ஒரு காரியத்தையும் செய்யவில்லை; அவரோ ஒரு குறுகலான படுக்கையின் மேல் (pallet) படுத்திருந்த ஒரு மனிதனிடம் நடந்து சென்று, அந்த மனிதனைச் சுகமாக்கி விட்டு, அவனுடைய படுக்கையை தூக்கிக் கொண்டு போக அவனிடம் கூறினார். பிறகு அங்கிருந்து நடந்து சென்று விட்டார், அங்கே படுத்திருந்த அந்த முழு பெரும் கூட்டத்தை விட்டுப் போய்விட்டார். அது சரிதானா? தேவனுக்குச் சித்தமானால், அடுத்த சில மாதங்களில், அந்த அதே ஏணியில் நான் நடக்க விரும்புகிறேன் அல்லது குளத்திற்குள் இருந்த அந்த அதே இடத்தில் நடக்க விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த சில மாதங்களில், பாலஸ்தீனாவில் இருக்கப் போகிறேன். 55. இப்பொழுது, அந்த நாளில், மகா திரள்கூ ட்ட ஜனங்கள் (great multitudes) அங்கே படுத்திருந்தனர். திரள் கூட்டம் என்பது, ஒரு திரள் கூட்டத்திற்குகு இரண்டாயிரம் ஜனங்களை எடுத்துக் கொள்ளும் என்று நான் கூறுகிறேன். அங்கே திரள் கூட்டத்தினர் இருந்தனர். நல்லது, இப்பொழுது, இங்கேயோ அல்லது மற்ற எங்கேயோ இருப்பது போன்ற பழங்கால குற்றம் கண்டுபிடிப்பவர்களை நீங்கள் ஞாபகம் கொள்ளுங்கள். "நீர் அந்த ஒருவனைச் சுகப்படுத்தவில்லை? அவர் இந்த ஒருவனைச் சுகப்படுத்தட்டும், அப்பொழுது நான்.. நான் அதை விசுவாசிப்பேன்.” ஏன், அவர் தம்முடைய சொந்த பட்டணத்திற்கு வரும் போது, அநேக வல்லமையான கிரியைகளை அவரால் செய்ய முடியாதிருந்தது, அதற்கு என்ன காரணம் என்று வேதாகமம் கூறுகிறது? (அவிசுவாசம் என்று சபையார் கூறுகின்றனர் - ஆசி.) அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தமாக. அது சரியே. எனவே ஆனால் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றும், அவர்களிடம் என்ன தவறு இருந்தது என்பதையும் அவர் அறிந்திருந்தார். அது சரிதானா? இப்பொழுது, பிலிப்பு வந்து, நாத்தான்வேலை அழைத்துகொண்டு வந்த போது, அவன் வருவதற்கு முன்பு, அவன் எங்கேயிருந்தான் என்பதை அவர் அறிந்திருந்ததாகக் கூறினார். 56. கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீ, அவர் அவளிடம் சற்று பேசி, அவளுடைய ஆவியைப் பிடித்து, அதன் பிறகு அவர் சொன்னார்; அவளுக்கு எங்கே தொல்லை இருந்தது என்று அவளிடம் கூறி, "போய், உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா” என்று கூறினார். அங்கே தான் அவளுடைய தொல்லை இருந்தது. அதற்கு அவள், "எனக்கு புருஷன் இல்லை ” என்றாள். அது சரியே. உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்." "ஏன்," அவள், "நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்று கூறி விட்டு, அவள் பட்டணத்திற்குள் ஓடி, "நான் செய்த எல்லாவற்றை யும் என்னிடம் கூறின கூறின ஒரு மனிதரை வந்து பாருங்கள்" என்றாள். அவள் அப்படியே உணர்ச்சி வசப்பட்டிருந்தாள். அவர் ஒரு போதும் அவள் செய்த எல்லாவற்றையும் அவளிடம் கூறவில்லை. அவர் செய்து கொண்டிருந்த ஒரு காரியத்தை அவளிடம் கூறினார். ஆனால் தேவனால் அதை அவருக்கு வெளிப்படுத்தக் கூடுமானால், அவரால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியும். அது சரிதானா? இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள், இப்பொழுது, நீங்கள் அதைப் பெற்றுக் கொள்கையில், ஏனென்றால் நான் ஏதோவொன்றின் பேரில் காத்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, அவர் அங்கே நின்று கொண்டிருக்கையில், கவனியுங்கள். இந்த மனிதன் தன்னுடைய படுக்கையை மூட்டைக் கட்டிக் கொண்டிருந்ததை அந்த யூதர்கள் கண்டு பிடித்தார்கள், பரிசுத்த யோவான் 19, அவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து, அவர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்டார்கள். இப்பொழுது, அவர் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். 57. "மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், குமாரன் தாமாகவே எதையும் செய்ய முடியாது” என்றார். அது சரிதானா? ஆனால் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்." அது சரிதானா? அப்படியானால் கிறிஸ்துவின் சொந்த வார்த்தையின்படி, அவர் சத்தியத்தையே கூறினார் என்று விசுவாசிக்கிறேன். அவர் சத்தியத்தைக் கூறின எந்தவிடத்திலும் நான் என் ஜீவனை வைப்பேன். அவருக்குள்ளிருந்த தேவன் முதலாவது அவருக்கு வெளிப்படுத்தி, என்ன செய்ய வேண்டுமென்று ஒரு தரிசனம் மூலமாக அவருக்குக் காண்பிக்கும் மட்டுமாக, அவரால் ஒரு காரியத்தையும் செய்ய முடியாதிருந்தது. லாசருவின் உயிர்த்தெழுதலைப் பாருங்கள். அவர் மூன்று நாட்கள் அந்த வீட்டை விட்டு தூரமாகப் போய் விட்டார். அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டேயிருந்தார். அவர், அவருக்காக அழைத்தனுப்பினர்; அவரோ தொடர்ந்து போய்க் கொண்டு இருந்தார். அதன் பிறகு அவர் திரும்பி, லாசரு மரித்து விட்டான். நான் அங்கேயில்லாததற்காக, உங்கள் நிமித்தமாக சந்தோஷம் அடைகிறேன். ஆனால் நான் போய் அவனை எழுப்பப் போகிறேன்” என்றார். பாருங்கள், பிதாவானவர் சரியாக அதை அவருக்குக் காண்பித்திருந்தார். லாசரு மரிக்கப் போகிறான் என்றும், அதைக் குறித்த எல்லாவற்றையும், அது சம்பவிக்க மூன்று நாட்கள் ஆகும் என்றும் பிதா அவருக்குக் காண்பித்திருந்தார். அவர்... திரும்பிச் சென்ற போது.... அவர் கல்லறைக்குச் சென்ற போது, கவனித்து பாருங்கள். அவர், 'நீர் ஏற்கனவே எனக்கு செவி கொடுத்துவிட்டீர் என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன், ஆனால் அருகில் நின்று கொண்டிருக்கிறவர்களுக்காகவே இதைச் சொன்னேன்” என்றார். பாருங்கள்? அதன் பிறகு அவர், "லாசருவே, வெளியே வா” என்றார். உடனே மரித்து நான்கு நட்களான ஒரு மனிதன் தன் காலூன்றி எழுந்து நின்று மறுபடியும் ஜீவித்தான். அந்த அதே இயேசு இன்றிரவும் இங்கேயிருக்கிறார். அது சரியே. 58. இப்பொழுது, அவர், "கொஞ்சக்காலத்திலே உலகம் (அவிசுவாசிகள்) என்னைக் காணாது” என்றார். இப்பொழுது, இந்தக் கூட்டத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்து, ஓ, அது மனதிலுள்ளவைகளை வாசிப்பது. அது புலன்கள் தொடர்பு இன்றியே, மனதிலுள்ளவைகளைத் தொடர்பு கொள்ளுதல் (mental telepathy), அது..." என்று கூறுவார்கள். அவர்களால் சொல்லியிருக்க முடியும்... அவரைக் குறித்தும் அவர்கள் அதே காரியத்தையே கூறினார்கள். அது சரிதானா? அவர்கள் அவரை, "பெயல்செபூல்” என்று அழைத்தார்கள். பெயல்செபூல் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? பிசாசுகளின் தலைவன், மிகப்பெரிய குறிசொல்லுபவன் (வருங்காலத்தில் நிகழும் ஒருவரின் தனிப்பட்ட காரியங்களை முன்னரே கூறுபவன் - fortuneteller), அங்கே பிசாசு தான் இருந்தான் (பெயல்செபூல்). அவர் பெயல்செபூல்" என்று கூறினார்கள். அவரோ, "வீட்டு எஜமானையே பெயல்செபூல் என்று அவர் அழைப்பார்களானால், அவருடைய சீஷர்களை எவ்வளவு அதிகம் அவர்கள் அழைக்கப் போகிறார்கள்” என்று கூறினார். அது அப்படியே அப்போஸ்தலத்துவத்தின் (apostleship), இயேசு கிறிஸ்துவின் சீஷத்துவத்தின் (discipleship) ஒரு உண்மையான அடையாளமாக இருக்கிறது (அது சரிதானா?). எனவே அவர் தாமே, நாம் பேசிக் கொண்டிருப்பது அவரைக் குறித்துதான்.... அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், நண்பர்களே. 1900 வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது இந்தப் பள்ளி அரங்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்..... இயேசு கிறிஸ்து, அவர் மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்தெழுந்திருந்தால், அவர், "உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், நான் உங்களோடு இருப்பேன், உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுக்குள்ளும் கூட இருப்பேன். நான் செய்கிற காரியங்களை நீங்களும் செய்வீர்கள்” என்று கூறியிருக்கிறார். ஆமென். 59. சகோதரர்களே, அது என்னை அவ்வண்ணமாக சிலிர்ப்படையச் செய்கிறது. ஓ, அது என்னுடைய இருதயத்தை... ஆக்குகிறது. இங்கே இந்த சிறிதளவு ஜனங்களுக்கு முன்பாக நான் நின்று கொண்டிருப்பதை அறிவது என்பது, நான் ஒரே நேரத்தில் 100,000 போன்று அவ்வளவு அதிகமானோருக்கு முன்பாக நின்று, அதே இயேசு கிறிஸ்துவை பிரதிநிதித்துவப்படுத்தி, நாம் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோமோ அதைப் பற்றி பயப்படாமல் இருந்த போது, அவர்... அந்த தூதனானவர் அந்த இரவில், "நான் உன்னோடு கூட இருப்பேன். நான் உன் அருகிலேயே இருப்பேன்" என்று கூறினார். அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். அவர் - அவர் யாரென்று எனக்குத் தெரியும். அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் நான் அறிவேன். நானோ, நான் எந்த நல்லவனும் இல்லை. நான் வெறும் ஒரு மனிதன் தான். ஆனால் அவரோ, அவர் இம்மானுவேலாக இருக்கிறார். அவர் தேவனாக இருக்கிறார். எனவே அவர் இங்கே இருக்கிறார் என்பதை நான் அறிவேன். எனவே இந்த மனிதர் இங்கே நின்று கொண்டிருக்கிறார், நாங்கள் அந்நியர்களாயிருக்கிறோம், என்னுடைய சகோதரனே, உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அறிந்த வரைக்கும், நான் உம்மை என்னுடைய ஜீவியத்தில் ஒருக்காலும் கண்டதேயில்லை, ஆனால் நம் இருவரையும் தேவன் அறிவார். இப்பொழுது, உம்முடைய ஆவியைப் பிடிக்கும்படி, நான் சற்று நேரம் உம்மிடம் பேசப் போகிறேன். உமக்கு புரிகிறதா? ஏனென்றால் நீர் ஒரு மனிதர்; நானும் ஒரு மனிதன். நமக்கு வித்தியாசமான வயதுகள் இருக்கின்றன; அநேகமாக அநேக மைல்கள் தூரத்தில் பிறந்து, வளர்ந்திருக்கலாம், நம்முடைய ஜீவியத்தில் நாம் ஒரு போதும் ஒருவரையொருவர் சந்தித்தது கிடையாது, ஆனால் நம் இருவரையும் தேவன் அறிவார். நல்லது, இப்பொழுது, நான் அவருடைய தீர்க்கதரிசியாக இருந்தால்.... இப்பொழுது, தீர்க்கதரிசி என்பதற்கு அவருடைய பிரசங்கி என்று அர்த்தம். புரிகிறதா? நான் அவருடைய அவருடைய ஞான திஷ்டிக்காரனாக இருந்து, நான் சத்தியத்தையே கூறியிருந்தால், தேவனுக்குச் சித்தமானால், அவருடைய வெளிப்படுத்தும் வல்லமையினாலே அவரால் முடியும்... அப்படியானால் நீர் உமது ஜீவியத்தை மறைக்க வேண்டியிருந்தால், உம்மால் உமது ஜீவியத்தை மறைக்கு முடியாது, உம்மால் முடியுமா? உம்மைக் குறித்த எல்லாவற்றையும் தேவன் அறிந்திருக்கிறார். நீர் யாரென்றும், நீர் எங்கிருந்து வருகிறீர் என்றும் உம்முடைய தொல்லை எதுவென்றும், நீர் எவ்வாறு இருக்கப் போகிறீர் என்றும், சுகமடைய என்ன தேவையாயிருக்கிறது என்றும் சரியாக அவர் எனக்குக் காண்பிக்க முடியும். அது சரிதானா? அவர் காட்டுகிறார் என்றால், ஆமென், அவர் காட்ட மாட்டார் என்றால், நான் உமக்காக ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுத்து விட்டு, மேடையை விட்டு போய் விடுவேன். செய்யும்படி எனக்குத் தெரிந்த ஒரே காரியம் அதுதான். 60. ஆனால் இப்பொழுது, நீர் நோக்கிப் பார்த்து, உமக்கு உதவி செய்யவே தேவன் என்னை அனுப்பியிருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். உமது ஆவியில் ஒரு நல்ல உணர்வு உமக்கு உண்டாயிற்று என்று நம்புகிறேன். நீர் ஒரு நேர்மையான மனிதர். நீர்-நீர்-நீர்....ல் ஆர்வமுள்ளவராய் இருக்கிறீர். அங்கே..... இல்லை, முதலில், உமக்கு உம் சரீரத்தின் மேல் ஒரு -ஒரு - ஒரு - ஒரு அரிக்கும் தோலழற்சி (சிரங்கு) இருக்கிறது. முடியவில்லை ... அதை எதுவுமே தொட முடியாது. அதன் பிறகு, உமக்கு ஒரு ஒரு அன்பார்ந்தவள், அல்லது மனைவி, அல்லது, ஒரு...ஐப் பெற்றிருக்கிற யாரோ ஒருவர் இல்லையா. அது முதுகெலும்பிலுள்ள கீல்வாதம் தானா? அது சரி அல்லவா? அவளுடைய முதுகெலும்பில் கீல் வாதம் இருக்கிறது. நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீரா? மேலும், நீர், உமக்கு ஒரு பழக்கம் இருக்கிறது, இல்லையா? புகைப்பிடித்தல். அது தவறு. நீர் அதை விட்டுவிடுவீரா? சரி. இங்கே வாரும். 61. தேவனே, இரக்கமாயிரும், கர்த்தாவே, உம்முடைய நாமத்திலே நான் ஆசீர்வதிக்கிற இந்த மனிதரை ஆசீர்வதியும். இவர் சுகம் அடைவாராக. உமது ஆவியானவர் தாமே இவர் மேல் வந்து, பாதாளத்தின் வல்லமைகள் யாவும் இவரை விட்டு விலகுவதாக. இந்தப் பழக்கம் இவரை விட்டுப் போவதாக, இவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பரிபூரணமாக சுகமடைந்து, நலம் அடைவாராக. ஆமென். ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பராக. போங்கள்....?... ஆமாம், அது போய் விடும். களிகூர்ந்தபடியே வெளியே சென்று, சந்தோஷமாயிரும். அது உம்மை விட்டு அப்படியே மறைந்து விடுவதை நீர் கவனிப்பீர். நாம், "தேவனுக்கு நன்றி" என்று கூறுவோம். நீங்கள் விசுவாசிக்கிறீரா? (சபையார், ஆமென்” என்று கூறுகிறார்கள். - ஆசிரியர்.) இப்பொழுது, பயபக்தியாயிருங்கள். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இப்பொழுது அந்த அரிக்கும் தோலழற்சி (சிரங்கு) இந்தக் கட்டிடத்திற்குள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. அது ஒரு நிழலைப் போன்று அவரை விட்டு வெளியேறியது. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) பயபக்தியாயிருங்கள். தேவன் மாத்திரமே சுகமாக்க முடியும். என்னால் முடியாது. நான் ஒரு மனிதன். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. அது முடிந்துவிட்டது. 62. நீல நிறமாகத் தோற்றமளிக்கிற கோட்டை அணிந்துகொண்டு, அங்கே உட்கார்ந்து கொண்டு, என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிற சீமாட்டியே, நீயும் கூட வியாதிப்பட்டிருக்கிறாய், இல்லையா? நீ சுகமடைய விரும்புகிற ஏதோவொரு வித குடல் வியாதி... தேவன் உன்னை முழுவதுமாக சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? சரி. நீ எழுந்து நிற்கலாம். இயேசு கிறிஸ்து உன்னைச் சுகப்படுத்துகிறார். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. ஆமென். நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? சற்று பொறு. எல்லாரும், தயவு செய்து பயபக்தியாயிருங்கள். சுற்று முற்றும் போகாதீர்கள் - அவ்வாறு நகராதீர்கள். அப்போது அங்கே ஏதோவொன்று சம்பவித்தது, நான்..... அது எங்கேயிருந்தது? அப்போது கேட்டுக் கொண்டிருக்கிற இந்தக் கூட்டத்தினரில் அங்கே யாரோ ஒருவர் சுகமடையவில்லையா? அது எங்கே? அந்தப் பெண்மணி... நான் பேசிக் கொண்டிருந்த யாரோ ஒருவர் சுகமடைந்து விட்டார், யாரோ ஒருவர். அவர்கள் எங்கே இருந்தார்கள்? நான் பேசிக் கொண்டிருந்தது.... கூட்டத்தினரில் நான் யாரே ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கவில்லையா? ஓ, மன்னித்துக்கொள்ளுங்கள். எழுந்து நில்லுங்கள். உங்களுடைய கோளாறு என்னவாக இருந்தது, சீமாட்டியே? பெருமாட்டியே? [சகோதரி, "குடல் தொந்தரவு” என்று கூறுகிறார் - ஆசிரியர்.) ஓ. 63. சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டு, இங்கே பார்த்துக் கொண்டிருக்கிற, அங்கு கீழே அந்த வரிசையில், இருப்பவர், உமக்கும்கூட குடல் தொல்லை இருக்கிறது, அது மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. தேவன் உன்னைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? பெருங்குடல் வியாதி, தேவன் உம்மைச் சுகப்படுத்தவார் என்று விசுவாசிக்கிறீரா, நீங்கள் இப்பொழுது, உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்ளும்படி விரும்புகிறீர்களா? நீங்கள் அவ்வாறு விரும்புகிறீர்களா? உம்முடைய காலூன்றி எழுந்து நில்லுங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பராக. இப்பொழுது வீட்டிற்கு தொடர்ந்து செல்லுங்கள், நீங்கள் சுகமடைவீர்கள். அது சாத்தானாக இருக்கிறது. அது பின்னால் போவதை நான் கண்டேன், அது எங்கே சென்றடைந்தது என்று தெரியவில்லை. பாருங்கள்? அது அந்த அதே ஆவியோடு பரிவிரக்கம் கொண்டிருந்தது (அனுதாபம் கொண்டிருந்தது.) இப்பொழுது நீங்கள் வீட்டிற்குச் சென்று, சுகமாயிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், கட்டிடத்திலுள்ள யாரும் சுகமடைய முடியும். சரி. இங்கே வாருங்கள், சீமாட்டியே. மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எனக்கு உங்களைத் தெரியாது, நான் என்னுடைய ஜீவியத்தில் உங்களை ஒருபோதும் கண்டதில்லை, உங்களைப் பற்றிய எதையும் அறிந்து கொள்ள எனக்கு எந்த வழியுமேயில்லை. உங்களுக்கும் என்னைத் தெரியாது. ஒரு வேளை... நாம் இங்கே சந்தித்த அந்நியர்களாயிருக்கிறபோம். அது சரி தானா? உங்களுக்கு உங்கள் வயிற்றில் தொல்லை இருக்கிறது. அது ஒரு கட்டியாக இருக்கிறது. அது சரிதானா? அது சரி என்றால், உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். தேவன் உங்களைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய ஞானதிஷ்டிக்காரன், அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள், நான் அதைக்கேட்கிறதன் காரணம் என்னவென்றால், தேவனுடைய தூதனானவர் என்னிடம், "ஜனங்கள் உன்னை நம்பும்படி செய்தால்" என்று கூறினார். புரிகிறதா? அந்த காரணத்தினால் தான், நான் அதைக் கேட்டேன். சற்று பொறுங்கள். இங்கே மறுபடியும் பாருங்கள். காயப்பட்டு இருக்கிற ஒரு அன்பானவர் உங்களுக்கு இருக்கிறார்கள். அது கணவர், அவர் -அவர்-அவர் - அவர் தம்முடைய கையில் காயமடைந்திருக்கிறார், மேலும் அவர்.... ஒரு மரம் அவர் மேல் விழுந்து விட்டது, அல்லது ஒரு மரத்தின் மேல் பாகம் அல்லது ஏதோவொன்று அவர்மேல் விழுந்துவிட்டது. அது சரிதானா? அது சரியென்றால், உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். நீங்கள் இருவரும் வீட்டிற்குச் செல்லுங்கள். நீங்கள் சுகமடையப் போகிறீர்கள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துகிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரியாக மேடையை விட்டு போங்கள். தேவன் உங்களோடு கூட இருப்பாராக. அம்மா, அந்த கீல்வாதத்திலிருந்து நீங்கள் சுகமடைய தேவன் செய்யப் போகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதைக் குறித்து ஜெபித்தவாறு அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். சரியாக இங்கே. சரி. எழுந்து நில்லுங்கள். அது முடிந்து விட்டது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நீங்கள் வீட்டிற்குப் போகலாம். அங்கே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 64. வாருங்கள், சகோதரியே. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? ஓ, எவ்வளவு அற்புதமானது. இப்பொழுது, நீங்கள், எல்லாரும் ஏன் விசுவாசிக்கக் கூடாது? பாருங்கள்? உமக்கு ஒரு உடைந்த கை உள்ளது, நிச்சயமாக, நான் அதைக் காண்கிறேன். உமக்கு ஏதோ தவறுள்ளது. நீங்கள் எழுந்து நிற்கக் கஷ்டப்படுகிறீர்கள். ஆமாம், அது வாத நோய். நீங்கள் அதைப் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்; உமக்கு போலியோ வந்து விட்டதாக எண்ணினீர்கள். ஆனால் அது போலியோ அல்ல; அது வாத நோயாகும். உமக்கு சிறுநீரகங்களில் சிறுநீரக கற்களும் கூட இருக்கிறது. உம்முடைய கல்லீரலில் உமக்கு ஏதோ தவறாயுள்ளது. நீங்கள் தொடர்ந்து மருந்து எடுக்க வேண்டியிருந்தது. இல்லாவிடில் கல்லீரல் செயல்படாது. அது சரி அல்லவா? கல்லீரலை முடக்கிக் கொண்டிருக்கும் நரம்பு சம்பந்தமான வியாதியாக இருக்கிறது, அது சரியாக ஓடும்படி விடாது. நீங்கள் அதற்காக தொடர்ந்து மருந்து எடுக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கு இல்லையா - ஒரு சகோதரன் விப்பர்ட் அவர்களை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? அவர் உம்மிடம் பேசிக் கொண்டு இருப்பதையோ அல்லது ஏதோவொன்றையே நான் காண்கிறேன். அது -அது உங்கள் மேய்ப்பர். இங்கே வாருங்கள். பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உமது ஆசீர்வாதங்கள் தாமே இந்தப் பெண்மணியின் மேல் வருவதாக, தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் தாமே இவளைச் சுகப்படுத்தி, இவளுக்கு சுகத்தைக் கொடுப்பாராக. இவளுடைய தொல்லைகள் எதுவாக இருந்தாலும், கர்த்தாவே, நீர் அவைகளைக் குறித்த எல்லாவற்றையுமே அறிந்திருக்கிறீர். இவர்களை முழுவதுமாக சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இதைக் கேட்கிறேன். ஆமென். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக. 65. சரி. வாருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? சர்வவல்லமையுள்ள தேவன் உங்களைச் சுகப்படுத்த இங்கேயிருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்கும்படிக்கு நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். முதலாவது காரியம் என்னவென்றால், உமக்கு ஒரு வேகமாகப் பரவக்கூடிய, ஒரு கட்டி இருக்கிறது, அது ஒரு புற்று நோயாகும். நீங்கள் இப்பொழுது சுகமடைந்து கொண்டிருப்பதாக உணருகிறீர்கள். அது சரி அல்லவா? வயதில் மூத்த பெண்மணியைக் குறித்து நீங்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அது உங்கள் தாயார். அவர்களுக்கு கீல்வாதம் உள்ளது. அவர்களுடைய கண்களிலும் ஏதோ தவறு இருக்கிறது. அது சரி அல்லவா? நல்லது, இப்பொழுது சென்று, உங்கள் கரங்களை அவர்கள் மேல் வையுங்கள். தேவன் தாமே உங்கள் இருவரையும் சுகப்படுத்துவாராக. கர்த்தராகிய இயேசுவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீர் இந்த ஆசீர்வாதங்களை அருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். நான் அதைக் கூறுகிறேன்.... அதை அவளின் மேல் வையுங்கள். இப்பொழுது, அதை எடுக்க அவள் உங்களிடம் பெற முடியும், அதை அவளுக்கு அனுப்புங்கள். சரி. வாருங்கள். சீமாட்டியே, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உங்களைச் சுகப்படுத்த தேவன் இங்கேயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரி. தேவன் உங்களைச் சுகப்படுத்த, நான் தேவனிடம் வேண்டிக் கொள்ளப் போகிறேன். இப்பொழுது, ஒரு கட்டிக்கான அறுவை சிகிச்சைக்கு சிகிச்சை எடுத்து வருகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். உமக்கு கீல்வாதமும் கூட இருக்கிறது. ஆனால் நீங்கள் அதை விசுவாசித்தால், அவர் உங்களைச் சுகப்படுத்துவார். நீங்கள்..... கர்த்தாவே, நான் இந்த வயதான தாயாரின் மேல் என்னுடைய கரங்களை இப்பொழுது வைக்கையில், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 66. அது முடிந்து விட்டது, சகோதரியே. நீங்கள் மேடையை விட்டு நடந்து செல்லலாம். அவர்களுக்கு இனி மேல் கீல்வாதம் கிடையாது. நீங்கள் அதைக் காண்கிறீர்கள். பாருங்கள், இவ்விதமாக தன்னுடைய கால்களை வைக்கிறார்கள். மிகவும் வாலபமான பெண்ணைப் போன்று நடந்து போகிறார்கள், உங்கள் கால்களால் இவ்விதமாக மேலும் கீழும் நடந்து செல்லுகிறீர்கள். நாம், "தேவனுக்கு நன்றி” என்று கூறுவோம். (சபையார், "தேவனுக்கு நன்றி” என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.) என்னுடைய சகோதரனே, நீங்கள் வருகையில், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இருதயக் கோளாறிலிருந்து நீங்கள் சுகமடைய விரும்புகிறீர்களா? அப்படியானால், நான் என்னுடைய சுகத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன்" என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மேடையை விட்டு, "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி” என்று கூறினபடியே செல்லுங்கள். சரி. வாருங்கள், சீமாட்டியே. நீங்கள் வருகையில், விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அவரால் முடியுமா? அவர் சுகப்படுத்தி விட்டார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் தொல்லை என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? பாருங்கள், என்னால் உங்களைச் சுகப்படுத்த முடியாது. முடியாது. ஆனால் நீங்கள் ஒரு மரித்துக் கொண்டிருக்கிற நிலையில் இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் நின்று கொண்டிருக்கிற விதத்தில் உங்களால் அதிக காலம் ஜீவிக்க முடியாது என்றும் உணருகிறீர்கள். அந்த காரணத்தினால் தான் நான் உங்கள் விசுவாசத்தை அசைத்துப் பார்க்க (shake) முயற்சிக்கிறேன், சீமாட்டியே. 67. இங்கே பாருங்கள். நாம் அந்நியர்கள் தானா? நமக்கு ஒருவரை ஓருவர் தெரியாது. நம் இருவரையுமே தேவன் அறிவார். அது சரிதானா? இங்கே வருவதற்கு உங்களுக்குப் போராட்டம் உண்டாயிருந்தது. அது சரி அல்லவா? வாழ்க்கை உங்களுக்கு மிகவும் மோசமான காரியமாக இருந்து வருகிறது. நீங்கள் வயிற்று பிரச்சனையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது சரி அல்லவா. சரியாக ஏறக்குறைய மரணத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள், அது உண்மை அல்லவா? ஆனால் நீங்கள் ஜெபம் பண்ணியிருக்கிறீர்கள், உங்களால் இந்த மேடைக்கு வர முடிந்தால், நீங்கள் சுகமடைந்து விடுவீர்கள் என்று நீங்கள் தேவனிடம் வேண்டிக் கொண்டீர்கள். நான் உங்கள் மேல் என் கரங்களை வைத்தால்.... நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. அது உண்மை தானா? இங்கே சமீபத்தில், படுக்கையின் பக்கத்தில் இருந்து ஜெபித்தீர்கள். நான்.... ஒரு படுக்கையின் பக்கத்தில் முழங்கால்படியிட்டீர்கள். இப்பொழுது, அது உண்மை அல்லவா? அது உண்மை என்றால், உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். இப்பொழுது, இங்கே வாருங்கள். நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? அப்படியானால் இந்தப் பெண்மணி யைப் பிடித்து வைத்திருக்கிற இந்தப் பிசாசு சபிக்கப்படுவானாக. அவன் இந்தப் பெண்மணியை விட்டு விலகி, இவளை விட்டு வெளியே வருவானாக. இயேசு கிறிஸ்தவின் நாமத்தில், அவன் போவானாக. இப்பொழுது, போய், உங்களுக்கு விருப்பமானதைப் புசியுங்கள், சீமாட்டியே. தொடர்ந்து போங்கள்........ நாம், "தேவனுக்கு நன்றி” என்று கூறுவோம். [சபையார், "தேவனுக்கு நன்றி” என்று கூறுகிறார்கள். - ஆசிரியர்.) சரி. அந்த சகோதரியை அழைத்த வாருங்கள். இப்பொழுது, சீமாட்டியே, உனக்கும் கூட வயிற்றுக்கோளாறு இருக்கிறது. நான் அதைக் கூறின உடனே, அது உன்னை அசைத்து விட்டது. அது சரி தானா? உங்களுக்கு செரிக்கச் செய்கிற வயிற்றுக் கோளாறு இருக்கிறது. அப்படியே தொடர்ந்து சென்று, உங்களுக்கு விருப்பமானதைப் புசியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பராக. போய் சுகமடையுங்கள். 68. வாருங்கள், சீமாட்டியே. நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? செல் வழியில் நீங்கள் பாருங்கள், நீங்கள் கண் கண்ணாடிகளை அணிகிறீர்கள். அது உண்மை என்று நமக்குத் தெரியும். ஆனால் ஒரு காலையில் நான் உங்களைக் காண்கிறேன், நீங்கள் எழும்ப கஷ்டப்படுகிறீர்கள். உங்கள் முதுகின் குறுக்கே உங்களுக்கு கீல்வாதம் உள்ளது. அது சரிதானா? தொடர்ந்து அங்கே அதனூடாக, "என்னைச் சுகப்படுத்தினதற்காக, உமக்கு நன்றி, கர்த்தாவே" என்று சொல்லிக் கொண்டு சென்று? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடையுங்கள். நாம், "தேவனுக்கு நன்றி” என்று கூறுவோம். [சபையார், "தேவனுக்கு நன்றி” என்று கூறுகிறார்கள். - ஆசிரியர்.) சரி. வாருங்கள், சீமாட்டியே. நீங்கள் மிகவும் ஆழமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர். நீங்கள் அதில் உங்கள் முழு இருதயத்தோடும் உத்தமமாயிருக்கிறீர்கள். ஆனால் அது நீங்கள் நரம்புக்கோளாறு கொண்ட ஒரு நபராக இருக்க காரணமாகி விட்டது. நீங்கள் மிகவும் பதட்டமடைகிறவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதுமே மற்ற ஜனங்களுடைய காரியங்களை எடுத்துக் கொண்டு, அதைக் குறித்தே சிந்தித்து, பாலங்களை அடையும் முன்பே அதைக் கடக்கிறீர்கள், ஒரு போதும் சம்பவிக்காத காரியங்களையும் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதில், அது உங்களுக்காக ஒரு வயிற்றுக்கோளாறை உருவாக்கிவிட்டது. அது சரி அல்லவா? சரி. இப்பொழுது நீ என்னை அவருடைய தீர்க்கதரிசியாக விசுவாசிக்கிறாயா? அப்படியானால் நீ இன்றிரவு இங்கிருந்து வெளியே சென்று, "கர்த்தராகிய இயேசுவே, கல்வாரியில் நீர் எனக்காக பிறர் பொருட்டு பட்ட உம்முடைய பாடுகளை ஏற்றுக் கொள்கிறேன். நீர் கல்வாரியில் எனக்காக (சம்பாதித்த) உம்முடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு விருப்பமானதை நான் சாப்பிடப் போகிறேன், நான் விடுதலையாகி விட்டேன் என்று பிசாசிடம் சொல்லுகிறேன்" என்று கூறுங்கள்... நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? அப்படியானால் போய் அதைச் செய்யுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்...?... ஆமென். 69. சரி. வாருங்கள், சீமாட்டியே. நீங்களும் நானும் அந்நியர்களாயிருக்கிறோம். நான்... அந்தவிதமாகத்தான் அதை சிந்திக்க வேண்டும், சகோதரியே. அந்தவிதமாகத்தான் அவர் மேல் உங்கள் சிந்தையை வைக்க வேண்டும். ஏதோவொன்றைப் பெற்றிருக்கிறீர்கள், நீங்கள்... அது ஒரு குடலிறக்கம். தேவன் உங்களைச் நலமாக்கி, சுகப்படுத்துவார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தார், நீங்கள் அதைக் கொண்டிருக்க முடியும். சகோதரியே, உங்களுக்கு பெண்களுக்கான கோளாறு இருக்கிறது அது சரி அல்லவா? அது ஒரு சீழ் படிந்த கட்டியாக இருக்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இங்கே வாருங்கள். என் சகோதரியே, நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். இயேசு கிறிஸ்தவின் நாமத்தில், அவர் தாமே உன்னைச் சுகப்படுத்துவாராக. ஆமென். இப்பொழுது, போ. ஓ, எவ்வளவு அற்புதமாயுள்ளது. சரி. வாருங்கள், சீமாட்டியே. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசம் கொண்டிருங்கள். 70. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும், ஐயா, நீங்கள் சற்று முன்பு சுகமானீர்களா? அந்தக் கண்ணாடிகளை அணிந்து கொண்டிருப்பவர், நீர் சற்று முன்பு, சுகமடைந்தீரா? ஆம், ஐயா. உமக்கு ஒரு -ஒரு அரிக்கும் தோலழற்சி இருந்ததா? நல்லது, சரியாக உமக்குப் பின்னால் இருக்கும் அந்த சீமாட்டி, அது... உமக்கும் கூட அரிக்கும் தோலழற்சி இருந்தது, இல்லையா? இப்பொழுது, அங்கே தான் அது நின்று கொண்டிருந்தது. அது அங்கே தொங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். சரி. சீமாட்டியே, இயேசு கிறிஸ்து உம்மையும் கூட சுகமாக்குகிறார். பிசாசு அதிலிருந்து உன்னை தோற்கடிக்க முயற்சித்தான், ஆனால் தேவன் உன்னை ஆசீர்வதித்தார். ஆமென். அந்த மனிதன் மேல் ஆசீர்வாதத்தை என்னால் காண முடிந்தது, என்னால் - என்னால் அதைக் கூற முடியவில்லை. நாம், கர்த்தருக்குத் துதி உண்டாவதாக” என்று கூறுவோம். [சபையார், கர்த்தருக்குத் துதி உண்டாவதாக” என்று கூறுகிறார்கள். - ஆசிரியர்.) என்னே , எவ்வளவு அற்புதமாயுள்ளது. சகோதரியே, இருதயக் கோளாறு உன்னை விட்டுப் போய்விட்டது, நீ மேடையை விட்டு களிகூர்ந்துகொண்டே, "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி” என்று கூறியபடி செல். 71. சாத்தான், ஓ, அவன் சரியாக இப்பொழுதே முழுவதுமாக தோற்கடிக்கப்பட்டு விட்டான். அவன் கல்வாரியில் முழுவதும் தோற்கடிக்கப்பட்டான்; அவன் சரியாக இங்கே இந்த சபையிலும் முழுவதும் தோற்கடிக்கப்பட்டான். அவன் அம்பலமாக்கப்பட்டான். நிச்சயமாகவே அவன் அம்பலமாக்கப்பட்டான். அவன் ரகசியமாக நழுவி பதுங்கிச் செல்பவனாக இருக்கிறான். அவன் ஏமாற்றக் கூடிய வஞ்சகனாக இருக்கிறான். ஆனால் அவனால் தேவன் இடமிருந்து மறைக்க முடியாது. சரியாக அவன் அங்கே இருக்கிறான் என்று தேவனுக்குத் தெரியும். சீமாட்டியே, உனக்கு பெண்களுக்குரிய கோளாறு இருக்கிறது. தேவன் இப்பொழுது உன்னைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? சரி. போய், களிகூர்ந்து, அதைக் குறித்து சாட்சி கொடு. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இதைக் கேட்கிறேன். நாம், "தேவனுக்கு நன்றி” என்று கூறுவோம். (சபையார், "தேவனுக்கு நன்றி” என்று கூறுகிறார்கள். -ஆசிரியர்.) யாரோ ஒருவர்... ஐயா, நீர் உம்முடைய அட்டையை கீழே போட்டு விட்டீரா? அது சரி தான். அப்படியே அதை பற்றிக்கொள்ளுங்கள். ஒருக்கால் நாம் ஒருசில நிமிடங்களில் அதற்கு வர முடியும். 72. திருவாளரே, நீர் இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்? கோடிட்ட கழுத்து பட்டையை அணிந்திருக்கும் அந்தச் சிறிய மனிதரே, இது சத்தியம் என்று விசுவாசிக்கிறீரா? ஆமாம். ஆம், ஐயா. உமக்கு இருக்கும் அந்த குடலிறக்கத்திலிருந்து குணமடைய விரும்புகிறீரா, மேலும் விரும்புகிறீரா - தேவன் உம்மைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீரா? சரி. எழுந்து நில்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீர் உம்முடைய அட்டையை போட்டு, ஏதோவொன்று விழுந்ததே, அது என்ன என்று நீர் வியந்து கொண்டிருந்த போது, நான் உம்முடைய கவனத்தை பிடித்துக் கொண்டு விட்டேன்.... இல்லை, அது அடுத்த மனிதருடைய அட்டை. விசுவாசம் கொண்டிருங்கள். அவர் உமக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அது உமது இடது பக்கத்தின் மேலே இருந்தது. ஆனால் தேவன் உம்மை ...ஆக்கப் போகிறார். அது சரிதானா? அது சரி என்றால், அது சரி என்றால் உம்முடைய கரத்தை மேலே உயர்த்தும். அது சரியே. சரி. இப்பொழுது அங்கே கீழேயே உணருகிறீர், அது போய்விட்டதை உம்மால் காண முடியும். இப்பொழுது, நீர் சுகமாயிருக்கிறீர். கிறிஸ்து உம்மைச் சுகப்படுத்தி விட்டார். கர்த்தருக்கு துதி உண்டாவாக. ஆமென். அங்கே அது இருக்கிறது. பாருங்கள். 73. பயபக்தியாயிருங்கள். இங்கே ஒரு செவிடான மனிதர் இருக்கிறார். எல்லாவிடங்களிலும் உங்கள் தலைகளைத் தாழ்த்தி வையுங்கள். வானங்களையும் பூமியையும் உண்டாக்கின தேவனாகிய கர்த்தாவே, இயேசு கிறிஸ்து மூலமாக சகலத்தையும் உண்டாக்கினவரே, வியாதியஸ்தர்களையும் துன்பப்படுகிறவர் களையும் சுகப்படுத்தும் படியாக இங்கே பிரசன்னமாகி நின்று கொண்டிருப்பவரே, நீர் இந்த மனிதனைச் சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வாகனத்தின் முன்பாக நடந்து, இவரைக் கொன்று, முன்கூட்டியே இவரை கல்லறைக்கு அனுப்ப காரணமாகும்படியாக, இவருடைய ஜீவனை எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிற இந்த செவிட்டு ஆவி தாமே, இவரை விட்டு வெளியே வருவதாக.... செவிடு என்று அழைக்கப்படும் பொல்லாத ஆவியே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த மனிதரை விட்டு வெளியே வா. இப்பொழுது, நான் சொல்லுவது கேட்கிறதா? "நான் கேட்கிறேன்.” உம்மால் அதைக் கூற முடிகிறதா என்று பாரும், ஆமென்” என்று கூறும். (ஆமென்.) நான் கர்த்தரை நேசிக்கிறேன் என்று கூறும். (நான் கர்த்தரை நேசிக்கிறேன்.) உமக்கு புரோஸ்டேட் சுரப்பி கோளாறு இருக்கிறது. மருத்துவர்கள் உமக்கு அறுவை சிகிச்சை செய்ய விரும்புகிறார்கள். நல்லது, உமக்கு உம்முடைய கேட்கும் திறனை கொடுத்த இயேசு கிறிஸ்து இந்த புரோஸ்டேட் சுரப்பி கோளாறிலிருந்தும் உம்மைச் சுகப்படுத்துகிறார். போய், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடையும். சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென். எவ்வளவு அற்புதமாயுள்ளது. தயவு செய்து, சுற்றிலும் போகாதீர்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தருடைய தூதனானவர் சரியாக இங்கே இந்த மாவட்டத்திலேயே தொடர்ந்து தொங்கிக் கொண்டு இருக்கிறார்.. நான்... சரியாக இங்கே இந்த வட்டாரத்திற்குள்ளேயே. 74. இவ்விதமாக ஒருவித நரைத்த தலைமுடியை உடையவளாய், சிறிய கறுப்பு நிற தொப்பியை அணிந்து, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சீமாட்டியே, உனக்கு கீல்வாதம் உள்ளது. அது சரி இல்லையா? அவர்.... அவர் வரும்படி முயற்சித்துக் கொண்டிருந்த ஒருவளாக நீ இருக்கிறாய். நீ நொண்டி நொண்டி நடந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். நீ ஏதோவொன்றை விட்டு கீழே இறங்க முயற்சித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். சில சமயங்களில் அவை உன் மேல் முழுவதும் வந்து, உன்னை மிகவும் வளையாமல் விறைப்பாக ஆக்கிவிடுகின்றன. இயேசு கிறிஸ்து உன்னைச் சுகப்படுத்துகிறார். நீ அதை விசுவாசிக்கிறாயா? நீ அவ்வாறு செய்வாயா? அப்படியானால், எழுந்து, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், உன் சுகத்தை ஏற்றுக் கொள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பராக. அவளுக்கு வலப்பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்த சீமாட்டி, அங்கே அவளுக்கு அடுத்து-அடுத்ததாக இருப்பவள், அவர் இப்பொழுது அவள் மேல் நின்று கொண்டிருக்கிறார். உனக்கு ஏதோவொருவித வளர்ச்சி இருக்கிறது, சீமாட்டியே. அது-அது தொண்டையில் இருக்கிறது. அது ஒரு முன்கழுத்துக் கழலையாக இருக்கிறது. அது சரிதானா? இயேசு கிறிஸ்து உன்னைச் சுகமாக்குகிறார். நீ அதை விசுவாசிக்கிறாயா? ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அதைச் செய்வதற்கான வழி அது தான். அங்கே அது இருக்கிறது. அது அவளை விட்டுப் போய்விட்டது. அவளுடைய தொண்டையில் பாருங்கள் (Look off). அது போய் விட்டது. தேவன் அவளைச் சுகப்படுத்தி விட்டார். நாம், "தேவனுக்குத் துதி உண்டாவதாக” என்று கூறுவோம். [சபையார், "தேவனுக்கு துதி உண்டாவதாக” என்று கூறுகிறார்கள். - ஆசிரியர்.) 75. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு வாலிப பெண்ணின் மேல் அவர் தொங்கிக் கொண்டிருக்கிறார். சீமாட்டியே, நீ அதைக் குறித்து என்ன நினைக்கிறாய்? உனக்கு வீங்கிய மண்ணீரல் உள்ளது, இல்லையா? அது சரி அல்லவா? நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? தேவன் எனக்கு தம்முடைய வார்த்தையைக் கொடுக்கிறார் என்று விசுவாசிக்கி றாயா? உன்னுடைய காலூன்றி எழுந்து நின்று, உன்னுடைய சுகத்தை ஏற்றுக்கொள், அப்பொழுது நீ கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், சுகமடைவாய். ஆமென். நாம், "தேவனுக்கு நன்றி” என்று கூறுவோம். [சபையார், "தேவனுக்கு நன்றி" என்று கூறுகிறார்கள்.] நாமெல்லாரும் எழுந்து நின்று எல்லாரும் அவருக்குத் துதியைச் செலுத்துவோம். நாம் நம்முடைய சுகத்திற்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். கர்த்தராகிய இயேசுவே, அன்பினால் நிறைந்தவரே, இங்கே இன்றிரவில் இருக்கும் இந்த வியாதிப்பட்ட எல்லாரையும், தேவையில் இருக்கிற எல்லாரையும் சுகப்படுத்தும், கர்த்தாவே. நாங்கள் உமக்குத் துதியைச் செலுத்துகிறோம். நீர் இங்கே இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம். தேவையிலுள்ள யாவரையும் ஆசீர்வதிக்கும்படியாகவும், அவர்களைச் சுகப்படுத் தவும் உமது ஆவியானவர் அருகில் இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். இப்பொழுது, கர்த்தாவே, என்னைத் தவிர இங்கே நின்று கொண்டிருக்கிற ஜனங்கள் தாமே, என்னுடைய பலம் போய் விட்டதை நான் அறிவேன், ஆனால் கர்த்தாவே, நீர் இங்கேயிருக்கிறீர். மேலும் இப்பொழுது, உமது ஊழியனாக, நான் இந்தக் கட்டிடத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு அசுத்த ஆவியின் மேலும் நான் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுகிறேன். நான் சாத்தானிடம், "நீ தோல்வியடைந்த ஒருவன். தேவன் கிறிஸ்துவை அனுப்பி, அவர் வெற்றியை பெற்று விட்டார். தேவ குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவினாலே, இந்த ஜனங்களை விட்டு வெளியே வரும்படியாக நான் உனக்கு கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில், இவர்களை விட்டு விலகு, அவர்களை விட்டுப் போ” என்று கூறுகிறேன்......